வெளிநாட்டு பயணத்தைத் தவிர்க்க வேண்டும்; தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி அறிவுரை
admin - 0
‘‘வெளிநாட்டு பயணத்தைத் தவிர்க்க வேண்டும். தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்’’ என்று நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. அமெரிக்கா - ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி சமூக...
ஏழுமலையான் குடிகொண்டுள்ள திருமலையில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளன. முதல் பிரம்மோற்சவ விழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
செப்டம்பர் மாத பிரம்மோற்சவத்திற்கு வரும் 8-ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 14-ம் தேதி அங்குரார்பன நிகழ்ச்சி நடைபெறும். இதனை தொடர்ந்து 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தொடர்ந்து காலை 8 - 10 மணி, இரவு...
நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்கை சிறப்பு அதிகாரம் மூலம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டிருந்த பேரணியை கை விடுவதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து...
கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்புகளில் மழை பெய்வதால் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 25-ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
கபினி அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 719 கன அடி நீர் வந்துக் கொண்டிருக்கும் நிலையில்,...
ஆந்திராவின் கர்னூலில் உள்ள ஆலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவின் கர்னூல் அருகேயுள்ள கொந்திவாரி கிராமத்தில் செயல்படும் ஆலையில் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அங்கு பணியில் இருந்த தொழிலாளி நூர் முகமதுவை கைது செய்து விசாரணைக்காக ஹைதராபாத்துக்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து மத்திய புலனாய்வுத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “செகந்திராபாத்தைச் சேர்ந்த நூர் முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார்.
அவர்...
பூங்கா நகர் என்ற பெருமைகொண்ட பெங்களூருவாசிகளுக்கு லால் பாக், கப்பன் பூங்காக்கள் வெறுமனே கூடிக் கலையும் பொழுதுபோக்கு இடமல்ல. அவர்களிடம் கேட்டால், ’அவை எங்களின் அடையாளம்; எங்களுடன் கலந்த உணர்வு’ என்பார்கள்.
அவ்வாறாக வரலாற்றுச் சிறப்புமிக்கது மட்டுமல்லாது பெங்களூருவாசிகளுடன் உணர்வுப்பூர்வ பிணைப்பையும் கொண்ட லால் பாக் பூங்காவில் ஆக.30 அன்று நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு ‘லால்பாக்-ல் நடப்போம்; லால்பாக்-காக நடப்போம்’ (Walk in Lalbagh. Walk for Lalbagh) என்று...
உத்தர பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர், நொய்டாவில் உள்ள தனது உறவினரைச் சந்திக்க கடந்த மாதம் 4-ம் தேதி பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது, கனமழை மற்றும் இருள் சூழ்ந்திருந்த நிலையில், சிறுமி தவறுதலாக பாரி சவுக் பகுதியில் இறங்கியுள்ளார். அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, சிறுமி உதவி கோரி சைகை செய்ததைத் தொடர்ந்து நின்றுள்ளது.
பேருந்து ஓட்டுநர் குல்தீப் மற்றும் நடத்துநர்...
விநாயகர் சதுர்த்திக்கு விதை களால் ஆன விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்று நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ அமைப்பின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்தோஷ் குமார், இந்த ஆண்டு முற்றிலும் இயற்கையான முறையில், விதைகளைக் கொண்டு விநாயகர் சிலைகளைத் தயாரித்துள்ளார். இச்சிலையை நடிகர் சிரஞ்சீவி நேற்று ஹைதராபாத்தில் அறிமுகம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கிரீன்...
ராமர் கோயிலுக்கு ரூ.4 கோடி அளித்த தமிழக பெண் – வங்கி கணக்கில் ரூ.3 மட்டுமே இருந்ததால் திரும்பிய காசோலை
admin - 0
அயோத்தி ராமர் கோயிலுக்கு தமிழகத்தின் கோயம்புத்தூரைச் சேர்ந்த பெண் பக்தர் ரூ.4 கோடி நன்கொடை அளித்திருந்தார். அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பிய நிலையில், வங்கிக் கணக்கில் ரூ.3 மட்டுமே இருப்பது தெரிய வந்துள்ளது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த எஸ்.நாகலட்சுமி எனும் பெண் பக்தர் கடந்த மாதம் 25-ம் தேதி அயோத்தி வந்திருந்தார். அப்போது ராமர் கோயில் தரிசனம் முடித்தவர் ரூ.10,000 ரொக்கமாக நன்கொடை அளித்திருந்தார்.
அடுத்து ஸ்ரீராம...
இஸ்லாமியர்களை வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்துவதாகவும் இருந்தும், இஸ்லாமியர்கள் அக்கட்சியை கண்மூடித்தனமாக நம்புவதாகவும் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் விமர்சித்துள்ளார்.
பாஜக செயற்குழு கூட்டம் மத்திய பிரதேச மாநிலத்தின் நிவாரி மாவட்டத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்று பேசினார்.
“இஸ்லாம் சமூகத்தின் வாக்குளை பெற்றுதான் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது. ஆனால், அவர்களின் வளர்ச்சிக்காக அந்த கட்சி ஒருபோதும்...










