அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம் என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டைக் கண்டித்தும், அதில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் உள்ள ஜப்பான் பூங்காவில் இன்று சுந்திர காண்ட பாராயணம் நடைபெற்றது. இதில், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா, கட்சியின் மூத்த தலைவர்...
மறைந்த பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் உடல், கர்நாடக அரசின் முழு அரசு மரியாதையுடன் மைசூருவில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.
பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, மைசூருவில் நேற்றுமுன்தினம் காலமானார். அவருக்கு வயது 88. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரெபால்லி அருகிலுள்ள பல்லப்பட்டா கிராமத்தில் 1938-ம் ஆண்டு பிறந்த ஜானகி, தனது 19-வது வயதிலேயே திரைத்துறைக்கு வந்துவிட்டார். சுமார் 60 ஆண்டு காலமாக, 48 ஆயிரத்துக்கும்...
அசாம் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறை தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளின் சட்ட ரீதியான நடைமுறைகள் முடிவடைந்து, நீதிமன்றத்தின் முறையான அனுமதி பெற்றதைத் தொடர்ந்து, அவற்றை அதிகாரப்பூர்வமாக அழிப்பதற்கான மாநில அளவிலான சிறப்பு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
குவாஹாட்டி புறநகர்ப் பகுதியில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட...
ஆந்திராவில் மீண்டும் கரோனா வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அங்கிருந்து கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. கடந்த 2020 முதல் 2021 தொடக்கம் வரை இந்தியாவில் முதல் கரோனா அலை ஏற்பட்டது. கடந்த...
எம்எல்ஏ-வை வாங்க ரூ.30 கோடிக்கு குதிரை பேரம்: உமர் அப்துல்லா கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்
admin - 0
ஜம்மு- காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்றது முதலே, அம்மாநிலத்திற்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கும் ஜம்மு- காஷ்மீர் அரசுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
இந்நிலையில், ஸ்ரீநகரின் ஹசரத்பால் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் உமர் அப்துல்லா பேசுகையில், ”ஜம்மு பகுதியைச் சேர்ந்த எங்களது...
“என்னை மவுனமாக்க வேண்டுமானால் நீங்கள் என்னை கொல்ல வேண்டியிருக்கும்” என்று பாஜகவுக்கு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மீது தாக்குதல்கள் நிகழ்ந்தன. திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் சுமார் 60 பேர்...
திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் 4,000் வீடுகள் சேதமடைந்துள்ளன; 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. பாதிக்கப்பட்ட உனகோடி மாவட்டத்தில் மட்டும் 6,068 பேர் 35 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தலாய் மற்றும் கோவாய் பகுதிகளில் மேலும் 4,909 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில்...
இந்தியாவின் பள்ளிக் கல்விக்கான அதிகாரப்பூர்வ டிஜிட்டல் மற்றும் தேசியத் தரவுத்தளம் யுடிஐஎஸ்இ+ (கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ்) ஆகும். இது, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
இதன் அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த 2025-26-ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் 4,791 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதில் ம.பி.யில் மட்டும் 2,426 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 2024-25-ல் 14,71,473...
பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் திலீப் குமார், பெங்களூரு 48-வது கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில், “நடிகர் பிரகாஷ் ராஜ் கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார். இது சட்டவிரோதமானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில் 3 முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் நேரில்...
ஆல்கஹால் கலப்புள்ள இருமல் சிரப் உள்ளிட்ட மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
புதிய விதிகளின்படி 12%-க்கும் அதிகமான ஆல்கஹால் கலந்து, 30 மிலி-க்கும் அதிக அளவுள்ள பாட்டில்களில் விற்கப்படும் மருந்துகள் அனைத்தும் ‘அட்டவணை எச்-1’ பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, இவற்றை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் நேரடியாக மருந்தகங்களில் வாங்க முடியாது.
அதிக ஆல்கஹால் கலப்புள்ள சில...










