“கர்நாடகாவில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு பத்திகள் மட்டுமே பாடப்படும்” – டி.கே.சிவகுமார் உறுதி
admin - 0
அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவது என்ற காங்கிரஸ் கட்சியின் முடிவையே தனது அரசு பின்பற்றும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.
கர்நாடகாவில் சுதந்திர தின விழாவின் போது வந்தே மாதரம் பாடல் முழுமையாகப் பாடப்பட்டது குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், “எனது கட்சியின் கொள்கையில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எங்கள்...
கர்நாடகாவில் ஊமத்தங்காய் விற்பனை செய்த அமேசான், பிக் பாஸ்கெட், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உணவு விநியோக உரிமத்தை அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது.
கர்நாடகாவில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்ததும் 15 நிமிடங்களுக்குள் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட், பிக்பாஸ்கெட் உள்ளிட்ட குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஊமத்தப்பூ, ஊமத்தங்காய், ஊமத்தை விதைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்...
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே மாவட்டத்தில், உலகின் மிக உயரமான பகுதி ஒன்றில் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய ராணுவ போர் பாராசூட் அமைப்பு நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
கடல் மட்டத்திலிருந்து 22,000 அடி உயரத்தில், மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில் டிஆர்டிஓ தயாரித்த ராணுவ பாராசூட் செயல்பாடு குறித்து சோதனை நடத்தப்பட்டது. ஏடிஆர்டிஇ அமைப்பின் தலைமைச் சோதனையாளர் விங்...
குஜராத்தின் சூரத்திலுள்ள மதரசாவில் பிஹாரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நாஜிஷ் படித்து வந்தான். வகுப்பு முடிந்ததும், அவன் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள பள்ளிவாசலின் 3-வது மாடிக்கு விளையாடச் சென்றுள்ளான்.
அப்போது, கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து பக்கத்து கட்டிடத்துக்குத் தாவ முயன்றபோது தவறிக் கீழே விழுந்தான். அதில், அங்கிருந்த கூர்மையான இரும்புக் கம்பி அவனது தோள்பட்டையில் குத்தி, வாய் வழியாக வெளியே வந்தது.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக்...
டிஆர்டிஓ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபுசார் ஏவுகணைகளைத் தயாரிக்கத் தனியார் துறைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து, 1,000 முதல் 1,500 கி.மீ. வரையில் உள்ள இலக்கைத் தாக்கும் நீண்டதூரத் தரைவழித் தாக்குதல் க்ரூஸ் ஏவுகணை மற்றும் 150 முதல் 500 கி.மீ. இலக்கை தாக்கும் 'பிரளய்' ஏவுகணைகளைத் தயாரிப்பதற்காக முன்னணித் தனியார் நிறுவனங்களை அடையாளம் காணும் பணியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
முன்னதாக,...
வங்காள விரிகுடாவில் மூழ்கிய சரக்கு கப்பல் – 2 மாலுமிகள் மீட்பு; 22 பேரை தேடும் பணி தீவிரம்
admin - 0
ஒடிசாவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட சரக்கு கப்பல் வங்காள விரிகுடாவில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் பயணித்த 2 மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான 22 பேரை தேடும் பணியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடேலார காவல்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
பனாமா நாட்டுக்கு சொந்தமான ‘எம்வி ஓசியன் வின்னர்’ என்கிற சரக்கு கப்பல், ஒடிசாவிலிருந்து 1,700 டன் இரும்புத் தாது கனிமங்களை எடுத்துக்கொண்டு, கடந்த வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில்...
இந்திய செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்படும் சில விஷயங்கள் யதார்த்தத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் செய்தித்தாள் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய செர்ஜியோ கோர், “நான் வீட்டுக்குத் திரும்பியதும் இந்திய செய்தி சேனல்களின் நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். நேரம் செல்லச் செல்ல நிகழ்ச்சிகள் மிகவும் விசித்திரமாகிவிடுகின்றன. மாலை 6 மணிக்கு ஒரு நிகழ்ச்சியில் எட்டு பேர் விவாதிப்பார்கள். இரவு 10 மணிக்கு,...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கனடா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு 8 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.
தனது பயணத்தின் முதல் கட்டமாக கனடாவின் டொராண்டோ நகருக்கு இன்று செல்லும் அவர், அந்நாட்டின் நிதி மற்றும் வருவாய் துறை அமைச்சர் பிரான்சுவா-பிலிப் சாம்பேனுடன் இணைந்து முதலாவது ‘இந்தியா - கனடா நிதிப் பேச்சுவார்த்தை’ நிகழ்வில் பங்கேற்கிறார். இதில் பொருளாதாரம், நிதித்துறை ஒத்துழைப்பு, முதலீடுகள், ஆற்றல்,...
ரஷ்ய அதிபர் புதினுடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்
admin - 0
இந்திய, ரஷ்ய வர்த்தக, பொருளாதார அறிவியல், தொழில்நுட்ப, கலாச்சார கூட்டமைப்பின் 27-வது மாநாடு மாஸ்கோவில் கடந்த 23, 24-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, அவர் நேற்று சந்தித்துப் பேசினார்.
அப்போது அமைச்சர் ஜெய்சங்கர் கூறும்போது, “இந்தியா, ரஷ்யா இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. வர்த்தகம், எரிசக்தி, உரங்கள், அணு...
கர்நாடகாவில் யாசகம் பெற்று வாழ்ந்த மூதாட்டி இறந்ததை தொடர்ந்து அவரது வீட்டை ஆராய்ந்த போது 30 மூட்டைகளில் ரூ.30 லட்சம் ரொக்கப் பணம் சேமித்து வைத்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள குதாலு பகுதியை சேர்ந்தவர் ஹூர் உன்னிசா (68). இவர் அங்குள்ள மசூதியின் வாயிலில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது வீட்டை...










