லடாக்கில் ராணுவ போர் பாராசூட் பரிசோதனை வெற்றி

0
15

ல​டாக் யூனியன் பிரதேசத்​தில் உள்ள லே மாவட்டத்தில், உலகின் மிக உயர​மான பகுதி ஒன்​றில் இருந்து பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உரு​வாக்​கிய ராணுவ போர் பாராசூட் அமைப்பு நேற்று வெற்றிகரமாக பரிசோ​திக்​கப்​பட்​டது.

கடல் மட்​டத்​திலிருந்து 22,000 அடி உயரத்​தில், மைனஸ் 15 டிகிரி செல்​சி​யஸ் கடும் குளிரில் டிஆர்​டிஓ தயாரித்த ராணுவ பாராசூட் செயல்​பாடு குறித்து சோதனை நடத்​தப்​பட்​டது. ஏடிஆர்​டிஇ அமைப்​பின் தலை​மைச் சோதனை​யாளர் விங் கமாண்​டர் ராகுல்ஜா, முதன்மை வாரண்ட் அதி​காரி​கள் ஆர்​.ஜே.சிங் மற்​றும் விவேக் திவாரி ஆகிய மூவர் இந்​தச் சாகச பாராசூட் குதிப்​பைச் செய்து காட்​டினர்.

இதுகுறித்து டிஆர்​டிஓ அமைப்பு எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “லடாக்​கில் உள்ள நியோ​மா, மூத் பகு​தி​யில் இச்​சோதனை நடை​பெற்​றது.

22,000 அடி உயரத்​தில் இருந்து குதித்த சோதனைக் குழு​வினர், இந்த ராணுவப் போர் பாராசூட் அமைப்புடன், உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​பட்ட பாரா கம்ப்யூட்டர், ஆக்சிஜன் அமைப்பு மற்​றும் சிறப்பு உடைகள் உள்ளிட்ட அனைத்​துத் துணை அமைப்​பு​களை​யும் வெற்றிகரமாகப் பயன்​படுத்​தினர்.

20,000 அடி உயரத்​தில் பாராசூட் திறக்​கப்​பட்​டு, கடல் மட்டத்திலிருந்து 13,700 அடி உயரத்​தில் குழு​வினர் பாது​காப்​பாகத் தரை​யிறங்​கினர்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மிகக் கடுமை​யான ஆர்​டிக் காலநிலை நில​வும் உயர​மான மலைப் பகு​தி​களில், இந்த பாராசூட் அமைப்​பின் செயல்​திறன், நம்​பகத்​தன்மை மற்றும் ராணுவப் பயன்​பாட்​டுத்தகுதி ஆகியவை இச்​சோதனை மூலம் நிரூபிக்​கப்​பட்​டுள்​ள​தாகக் கூறி​யுள்ள டிஆர்​டிஓ, இது பாதுகாப்​புத் தொழில் நுட்​பத்​தில் சுய​சார்பு இலக்கை மேலும் வலுப்​படுத்​தி​யுள்​ள​தாகவும் குறிப்​பிட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here