மேற்கு வங்கத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவர்கடந்த ஆக.9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதிகேட்டு மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மாநில அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று 42 நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 21-ம் தேதி தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
இந்த சூழ்நிலையில், படு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நேற்று மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: அந்த கொடூரமான சம்பவம் எங்கள் மகளுக்கு நடந்த பிறகுநாங்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி, இப்போது ஆதரவற்றவர்களாக உணர்கிறோம். இந்த சூழ்நிலையில் உங்களை சந்தித்துப் பேச ஆசைப்படுகிறேன். உங்கள் வசதிப்படியோ அல்லது நீங்கள் பரிந்துரைக்கும் வேறுஎந்த இடத்திலோ சந்தித்துப் பேசுவதற்காக இந்த கடிதம் மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
தற்போதைய சூழ்நிலை மற்றும்சில விஷயங்களை பற்றி விவாதிக்க நான் என் மனைவியுடன் சேர்ந்து தங்களை சந்திக்க விரும்புகிறேன். எங்களின் பிரச்சினையை தீர்க்க உங்கள் வழிகாட்டுதல் தேவை. இதில் உங்கள் அனுபவம்விலைமதிப்பற்றதாக இருக்கும்என்று நம்புகிறேன். தங்களது சாதகமான பதிலை எதிர்நோக்கு கிறேன். இவ்வாறு அதில் குறிப் பிட்டுள்ளார்.