மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் லாரன்ஸ் பிஷ்னோய் போட்டியா? – சர்வதேச குற்றவாளிக்கு மாநில அரசியல் கட்சி அழைப்பு

0
31

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தாதா லாரன்ஸ்பிஷ்னோய்க்கு அம்மாநில அரசியல் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதை லாரன்ஸ் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கடந்த 12-ம் தேதி மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சமூக வலைதளத்தில் பொறுப்பேற்றது. இது உண்மையா என மகாராஷ்டிர காவல்துறை விசாரித்து வருகிறது. இதையடுத்து நடிகர் சல்மான் கானை கொல்லப்போவதாக லாரன்ஸ் ஏற்கெனவே அறிவித்த விவகாரம் கிளம்பியுள்ளது. இச்சூழலில் மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுமாறு லாரன்ஸுக்கு அம்மாநில புதிய அரசியல் கட்சியான உத்தர்பாரதிய விகாஸ் சேனா (யுபிவிஎஸ்) அழைப்பு விடுத்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய லாரன்ஸ் தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் உள்ளார்.

இந்நிலையில் லாரன்ஸுக்கு யுபிவிஎஸ் தலைவர் சுனில் சுக்லா எழுதியுள்ள கடிதத்தில் தனது அழைப்பை ஏற்றுக் கொண்டால் அவரது வெற்றிக்காக தங்கள் கட்சி தீவிரமாகப் பாடுபடும் என உறுதி அளித்துள்ளார்.

லாரன்ஸ் தலைக்கு பரிசு: ராஜஸ்தானின் சமூக அமைப்பான ஸ்ரீராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனாவின் தலைவராக இருந்தவர் சுக்தேவ் சிங் கோகாமேடி. இவர்,கடந்த வருடம், டிசம்பர் 5-ம் தேதி ஜெய்ப்பூரில் சுட்டுக் கொல்லப்பட்டார். என்ஐஏ விசாரிக்கும் இந்த வழக்கில் ஒரு பெண் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலையை தனது கும்பல் செய்ததாக சமூக வலைதளங்களில் லாரன்ஸ் பதிவிட்டிருந்தார். இதையடுத்து லாரன்ஸைஎன்கவுன்ட்டரில் கொல்லும் போலீஸாருக்கு ரூ.1 கோடியே 11 லட்சம் பரிசு வழங்கப்படும் என கர்னி சேனாவின் தற்போதைய தலைவர் ராஜ் ஷெகாவாத் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது பதிவு வட மாநிலங்களில் வைரலாகி வருகிறது. இதில் லாரன்ஸை கொல்லும் போலீஸாரின் குடும்பத்துக்கு தங்கள் அமைப்பு முழு பாதுகாப்பு அளிக்கும் என அவர்உறுதியளித்திருப்பதும் சர்ச்சையாகி வருகிறது. கடந்த வருடம் செப்டம்பரில் காலிஸ்தான் ஆதரவாளர் சுக்காதுனேகா பஞ்சாபில் கொல்லப்பட்டார். இதற்கும் லாரன்ஸ் தனதுசமூக வலைதள பதிவில் பொறுப் பேற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here