அமெரிக்க நீர்வீழ்ச்சியில் விழுந்து இந்தியர் உயிரிழப்பு

0
25

அமெரிக்​கா​வின் கலிஃ​போர்​னியா மாகாணத்​தில் உள்ள ஒரு நீர்​வீழ்ச்​சி​யில் விழுந்து ஆந்​தி​ராவை சேர்ந்த இளம் பொறி​யாளர் தனது பிறந்​த​நாளன்றே பரி​தாப​மாக உயி​ரிழந்​துள்​ளார்.

ஆந்​திர மாநிலம், விஜயநகரம் மாவட்​டம், பொப்​பிலி பகு​தியை சேர்ந்​தவர் சிங்​கிரெட்டி சாய் ஸ்ரீஹரி​கிருஷ்ணா (26). இவர் அமெரிக்​கா​வின் மிசோரி அருகே செயிண்ட் லூயிஸ் பகு​தி​யில் உள்ள வெஸ்ட் மின்​ஸ்​டர் எனும் இடத்​தில் தனது நண்​பர்​களு​டன் வசித்து வந்​தார். பொறி​யியல் பட்ட மேற்​படிப்பு (எம்​எஸ்) முடித்து அங்​குள்ள ஒரு நிறு​வனத்​தில் பணி​யாற்றி வந்​தார்.

இவருக்கு சிறு வயது முதலே நீச்​சலில் ஆர்​வம் மிக அதி​கம். இவர் அமெரிக்​கா​வில் நீச்​சல் பயிற்​சி​யாள​ராக கூட பணி​யாற்றி உள்​ளார். இந்​நிலை​யில், கடந்த 12ம் தேதி ஞாயிற்​றுக்​கிழமை தனது பிறந்த நாளை கொண்​டாட சாய் ஸ்ரீஹரிகிருஷ்ணா மற்​றும் அவரது 4 நண்​பர்​கள் கலிஃ​போர்​னி​யா​வில் உள்ள மெராமெக் ஸ்டேட் பார்க் பகு​திக்கு சென்​றனர். அங்கு உள்ள ஒரு நீர்​வீழ்ச்​சிக்கு சென்று அனை​வரும் நீச்​சலடித்து உற்​சாக​மாக கொண்​டாடி மகிழ்ந்​தனர்.

அப்​போது, திடீரென வெள்​ளத்​தில் சாய் ஸ்ரீஹரி​கிருஷ்ணா அடித்​துச் செல்​லப்​பட்​டார். இதனை கண்​டு, சக நண்​பர்​கள் அவரை காப்​பாற்ற முயற்​சித்​தும் பலன் இல்​லை. அதற்​குள் சாய் கிருஷ்ணா முழு​மை​யாக தண்​ணீரில் அடித்​துச் செல்​லப்​பட்​டார். உடனே இது குறித்து போலீ​ஸாருக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. மீட்பு படை​யினரும் 15 நிமிடத்​திற்​குள் சம்பவ இடத்​திற்கு சென்று சாய் ஸ்ரீஹரி​கிருஷ்ணாவை தேடினர். பின்​னர், நதிக்​கரை​யில் சாய் ஸ்ரீஹரிகிருஷ்ணா​வின் சடலம் இருப்​பதை கண்டு மீட்​டெடுத்​தனர். இது குறித்து ஆந்​தி​ரா​வில் உள்ள அவரின் பெற்​றோருக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதனை அறிந்து பெற்​றோர், உற்​றார், உறவினர்​கள் மற்​றும் நண்​பர்​கள் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர். கடந்த ஆண்டு டிசம்​பர் மாதத்​தில் தான் சாய் ஸ்ரீஹரி​கிருஷ்ணாவுக்கு பல முயற்​சிகளுக்கு பின்​னர் அமெரிக்​கா​வில் வேலை கிடைத்​தது. அதற்​குள், அவர் பிறந்த நாளி​லேயே இறந்து விட்​டாரே என அவரது பெற்​றோர்​கள் கதறி அழுகின்​றனர். சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரும் முயற்​சிகளும் நடை​பெற்று வரு​வ​தாக உறவினர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here