திருநங்கைளுக்கு அரசுப் பணியில் இடம் வழங்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

0
20

ஆசி​ரியர் காலிப்​பணி​யிடங்​களுக்கு திருநங்கைகள் விலக்​கப்​பட்டு, இருநிலை பாலினத்​தவர் மட்​டுமே விண்​ணப்​பிக்க அனுமதித்த டெல்லி கல்வி இயக்​குநரகம் மற்​றும் டெல்லி துணைநிலை சேவை​கள் தேர்வு வாரியம் வெளி​யிட்ட அறிவிப்புகளை எதிர்த்து ஜேன் கவுஷிக் மற்​றும் பிரவீன் சிங் ஆகியோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர்.

இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் ஜெ.பி. பர்​திவாலா மற்​றும் நீதிபதி கே. வினோத் சந்​திரன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: அரசுப் பணி நியமனங்​களுக்​கான ஆட்​சேர்ப்பு அறி​விப்பு ஏன் ஆண் மற்றும் பெண் பிரி​வினருக்​கானதாக வரு​கிறது? பாலின அடிப்​படை​யில் காலிப்​பணி​யிடங்​களை அறி​விப்​ப​தற்​கான சட்​டப்​பூர்வ அடிப்​படை என்ன?

பொது ஆட்​சேர்ப்​பில் காலிப் பணி​யிடங்​களை அறி​விக்க பாலினத்தை அடிப்​படை​யாகப் பயன்​படுத்​து​வதற்​கான ஆதா​ரம் என்ன? ஆசி​ரியர் காலிப்​பணி​யிட அறி​விப்​பு​களில் மூன்​றாம் பாலினத்​தவரைச் சேர்க்க முன்​மொழி​கிறார்​களா? அரசுப் பணியில் திருநங்​கைகளுக்கு எவ்​வாறு இடமளிக்​கப்​படும்? இந்த கேள்​வி​களுக்​கான பதிலை டெல்லி அரசு விரிவாக தாக்​கல் செய்ய வேண்​டும். இவ்​வாறு அந்த உத்​தர​வில் கூறப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here