பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 11-ல் கனடா பயணம்

0
26

பிரதமர் நரேந்​திர மோடி 2 நாள் பயண​மாக வரும் டிசம்​பர் 11-ம் தேதி கனடா செல்ல உள்​ளார். கனடா​வின் ஒட்​டாவா நகரில் உள்ள இந்​தி​யத் தூதரகம் தனது சமூக வலை​தளப்பக்கத்தில் வெளி​யிட்ட பதி​வில், “பிரதமர் நரேந்திர மோடி, டிசம்​பர் 11-12 தேதி​களில் கனடாவுக்​குப் பயணம் மேற்​கொள்​வார்.

பிரதமர் மோடி​யும் கனடா பிரதமர் மார்க் கார்​னி​யும் சமீபத்​தில் தொலைபேசி​யில் உரை​யாடினர். அப்​போது, இரு நாடு​களுக்கு இடையே​யான உறவில் ஏற்​பட்​டுள்ள நேர்​மறை​யான உத்​வேகத்​தைத் தொடர இரு தலை​வர்​களும் ஒப்​புக் கொண்​டனர். மேலும் வர்த்​தகம், எரிசக்​தி, தொழில்​நுட்​பம், பாது​காப்பு மற்​றும் மக்​கள் இடையே​யான உறவு​கள் ஆகிய​வற்​றில் உறு​தி​யான பலன்​களை அடைய பாடு​படு​வது என்​றும் ஒப்​புக் கொண்​டனர்” என கூறப்பட்டுள்​ளது.

பிரதமர் மோடி​யின் இந்​தப் பயண தேதியை கனடா பிரதமர் மார்க் கார்​னி​யும் உறு​திப்​படுத்தி உள்​ளார். இந்த இரு நாள் பயணத்​தின்​போது, பிரதமர் மோடி ஒட்​டாவா மற்​றும் டொராண்டோ ஆகிய நகரங்​களுக்​குச் செல்​வார் என்​றும் அங்கு அவர் இந்​திய வம்​சாவளி​யினர் பங்​கேற்​கும் நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொள்​வார் என்​றும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இருதரப்பு உறவில் முன்னேற்றம்

ஜஸ்​டின் ட்ரூடோ பிரதம​ராக இருந்​த​போது, கனடா, இந்​தியா இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டது. மார்க் கார்னி பிரதமரான பிறகு இருதரப்பு உறவில் முன்​னேற்​றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை​யில்​தான் பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்​கொள்ள உள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here