நடிகர்​ இம்ரான்​ ​கான்​ இந்தியாவை விட்​டு வெளியேற மத்திய அமைச்சகத்தின் குடியேற்றத் துறை உத்தர​வு

0
24

ம​கா​ராஷ்டிர ​மாநிலம்​ ​மும்​பை​யில்​ நடை​பெற்​ற தலைமை தேர்​தல்​ ஆணை​யர்​ ​ஞானேஷ் கு​மார்​ ப​த​வி ​வில​கக்​ கோரி நடை​பெற்​ற போ​ராட்​டத்​தில்​ கலந்​து கொண்​டதற்​காக நடிகர்​ இம்ரான்​ ​கான்​ இந்தியாவை ​விட்​டு வெளி​யேற மத்​தி​ய அரசு உத்​தரவிட்​டுள்​ளது.

மும்​பை​யில்​ அக்​டோபர்​ 10-ம்​ தே​தி தலைமைத்​ தேர்​தல்​ ஆணையர்​ ​ஞானேஷ் கு​மாருக்​கு எ​தி​ராக போ​ராட்​டம்​ நடை​பெற்றது. அ​தில்​, நடிகர்​ இம்​ரான்​ ​கான்​ கலந்​து கொண்​டார்​. இவர்​ அமெரிக்​க குடி​யுரிமை மற்​றும்​ இந்​தி​ய வம்​சாவளி வெளி​நாட்​டு குடி​யுரிமை (ஓசிஐ) பெற்​றவர்​. ஓசிஐ ​கார்​டு என்​பது வெளி​நாட்​டு ​சான்​றளிக்​கப்​பட்​ட குடி​யுரிமை ​வைத்​திருக்​கும்​ தகு​தி​யுள்​ள இந்திய வம்​சாவளி​யினருக்​கு வழங்​கப்​படும்​ அட்​டை​யாகும்​.

இந்​தி​ய வெளி​நாட்​டுப்​ பிரஜை என்​று குறிப்​பிடப்​பட்​டிருந்​தா​லும்​ ஓசிஐ தகு​தி என்​பது இந்​தி​யக்​ குடி​யுரிமை​யை வழங்​காது. ஓசிஐ ​கார்​டு​தா​ரர்​கள்​ இந்​தி​யா​வில்​ தங்​கி​யிருந்​தா​லும்​ அவர்​கள்​ தொடர்ந்​து வெளி​நாட்​டுப்​ பிரஜைகளாகவே கருதப்​படு​வார்​கள்​.

இருப்​பினும்​, ​வி​தி​களுக்​கு உட்​பட்​டு இந்​தி​யா​வுக்​கு வந்​து செல்​ல ​வாழ்​நாள்​ ​முழு​வதுக்​கு​மான ‘மல்​டிபிள்​ என்ட்​ரி ​வி​சா’ உள்​ளிட்​ட சில சிறப்​புச்​ சலுகைகள்​ அவர்​களுக்​கு வழங்​கப்​படு​கின்​றன. ஓசிஐ ​கார்​டு​தா​ரர்​கள்​ இந்​தி​யத்​ தேர்​தல்​களில்​ ​வாக்​களிக்​கவோ, ​நா​டாளு​மன்​றம்​ அல்​லது ​மாநில சட்​டமன்​றத்​ தேர்​தல்​களில்​ ​போட்டி​யிட​வோ ​முடி​யாது. மேலும்​ இந்​தி​யா​வில்​ நிபந்​தனையற்​ற வகை​யில்​ தங்க முடியாது.

இந்​த நிலை​யில்​தான்​ நடிகர்​ இம்​ரான்​ ​கான்​ வரும் அக்​டோபர்​ 28-க் குள்​ இந்​தி​யா​வை ​விட்​டு வெளி​யேற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடியேற்றத்துறை உத்தரவிட்டுள்ளது​. இம்​ரான்​ ​கான்​ ​போ​ராட்​டத்​தில்​ பங்​கேற்​றதன்​ மூலம்​ அவர்​ சட்​டத்​தை மீறி​விட்​ட​தாக ​பாஜக தலை​வர்​ கிரிட்​ சோமை​யா அளித்​த பு​காரைத்​ தொடர்ந்​து மத்​தி​ய அரசு இந்​த நடவடிக்​கை​யை எடுத்​துள்​ளது.

இதுகுறித்​து சோமை​யா கூறும்​போது, “இந்​தி​யா​வில்​ இது​போன்​று ஆ​யிரக்​கணக்​கான இம்​ரான்​ ​கான்​கள்​ உள்​ளனர்​. அவர்​கள்​ இங்​கு ​வாழ்ந்​து​ கொண்​டே ​நாட்​டுக்​கு அவப்​பெயர்​ ஏற்​படுத்​த ​விரும்புகிறார்​கள்​. அப்​படிப்​பட்ட அனை​வருக்​கும்​ எ​தி​ராக நடவடிக்​கை எடுத்​து, அவர்​களை ​நாட்​டை ​விட்​டு வெளியேற்​ற வேண்டும்” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here