‘இந்தியா​வின் சுகா​தார கட்டமைப்பு இங்கிலாந்தை​விட சிறப்பாக உள்ளது’ – வெளிநாட்டு தம்பதி பாராட்டு

0
22

பிரிட்​டனைச் சேர்ந்த டேவ் ஃப்ளூ என்​பவர் தனது மனைவிக்கு செயற்கை கருத்​தரித்​தல் (ஐவிஎப்) சிகிச்சை மேற்கொள்​வதற்​காக இந்​தியா வந்​துள்​ளார். அவர் உத்தர பிரதேச மாநிலம், லக்னோ​வில் உள்ள ஒரு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார்.

இந்​நிலை​யில், இங்​கிலாந்​தை​விட இந்​தி​யா​வில் மருத்​துவ சிகிச்சை விரை​வாக​வும், குறைந்த செல​விலும் கிடைப்​ப​தாக பாராட்டு தெரி​வித்​துள்ளார். இதுகுறித்​து, டேவ் ஃப்ளூ தனது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் வெளியிட்ட வீடியோவில் “இந்​தி​யா​வின் சுகா​தா​ரக் கட்​டமைப்பு இங்​கிலாந்தை விடச் சிறந்​தது. நானும் எனது மனை​வி​யும் லக்​னோ​வில் உள்ள மேக்ஸ் ஸ்பெஷாலிட்டி மருத்​து​வ​மனை​யில் ஐவிஎப் சிகிச்சை பெற்று வரு​கிறோம். இங்கு கிடைத்த அனுபவம் எனக்​குப் பல புதிய புரிதல்​களை அளித்துள்ளது.

இங்​கிலாந்​தில் எக்​ஸ்​-ரே பரிசோதனை அறிக்​கை​யைப் பெற ஒருமாதம் வரை காத்​திருக்க வேண்டும். ஆனால், இந்​தி​யா​வில் ஒரு மணி நேரத்​துக்​குள் அறிக்கை கிடைத்​து​விடு​கிறது. குறித்த நேரத்தில் மருத்​து​வப் பரிசோதனை​களுக்​கான சந்​திப்பு கிடைப்பது மட்​டுமல்​லாமல், ஒரே கட்​டடத்​தில் பல்​வேறு பரிசோதனை​களை செய்​து​கொள்ள முடிகிறது. இத்​தகைய வசதிகள் கொண்ட மருத்​து​வ​மனை​யில், குறைந்த செல​வில் இவ்வளவு விரை​வாக சிகிச்சை பெற முடிவதை என்​னால் இன்​னும் முழு​மை​யாகப் புரிந்​து​கொள்ள முடிய​வில்​லை” என தெரிவித்துள்ளார்.

இந்​தக் காணொலியை 1.68 லட்​சத்​துக்​கும் அதி​க​மானோர் கண்டு லைக் செய்​து, பல்​வேறு கருத்​துகளைப் பதி​விட்​டுள்​ளனர். “10 நிமிடங்​களில் முடிக்​கக்​கூடிய எக்​ஸ்​-ரே அறிக்​கைக்​காக ஒரு மாதம் ஏன் காத்​திருக்க வேண்​டும்?” என்று ஒரு​வர் கேள்வி எழுப்பியுள்​ளார். மற்​றொரு​வர், “இதைக் கேட்​பது மகிழ்ச்​சி​யாக உள்​ளது. இந்​தி​யா​வில் வீட்டுவேலை உதவி, மருத்​துவ சிகிச்சைகள் குறைந்த செல​வில் கிடைக்​கின்​றன” என்​று தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here