ஒடிசாவிலிருந்து மாநிலங்கள வைக்கு பிஜு ஜனதா தளம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி. மமதா மொகந்தா கடந்த மாதம் 31-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்து பாஜக.வில் இணைந்தார். அவருடன் சேர்த்து 9 மாநிலங்களைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப செப்டம்பர் 3-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பு வரும் 14-ம் தேதி...
வங்கதேசத்தில் பிரபல இந்து நாட்டுப்புற பாடகர் ராகுல் ஆனந்தாவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது.
வங்கதேச தலைநகர் டாக்கா நகரின் தன்மோண்டி பகுதியில் பிரபல இந்து நாட்டுப்புற பாடகர் ராகுல் ஆனந்தாவின் வீடு உள்ளது. இவர் ‘ஜோலர் கான்' என்ற நாட்டுப்புற இசைக்குழுவை நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு வங்கதேசம் வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நட்புரீதியாக இவரது வீட்டுக்கு வருகை தந்தது மிகுந்த கவனம் பெற்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம்...
ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஜன் லால் அரசில் அமைச்சர் ஒருவருக்கு சட்டப்பூர்வ பதவி அளிக்கப்பட்ட விவகாரத்தை மாநில சட்டப்பேரவையில் கடந்த திங்கட்கிழமை காங்கிரஸ் எழுப்ப முயன்றது. அப்போது அவையில் காங்கிரஸ் எம்எல்ஏ முகேஷ் பாகர் நடந்துகொண்ட விதத்தை கண்டித்த சபாநாயகர், அவரை அவையில் இருந்து வெளியேறுமாறு கூறினார். அவர்களை சபாநாயகர் உத்தரவின் பேரில் அவைக் காவலர்கள் வெளியேற்றினர்.
இந்நிலையில் அவையில்...
வங்கதேசத்தில் முக்கியத்துவம் அல்லாத இந்திய தூதரக ஊழியர்கள் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் டாக்கா நகரில்இந்திய தூதரகம் செயல்பட்டுவருகிறது. இதுதவிர வங்கதேசத்தின் சிட்டகாங், ராஜ்ஷாஹி, குல்னா, சில்ஹெட் ஆகிய பகுதிகளில் இந்திய துணைத் தூதரகங்கள் உள்ளன. தற்போது வங்கதேசத்தில் நிலவிவரும் அசாதாரணசூழல் தொடர்பாக இந்திய அரசின்நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைத்தார்.
அப்போது, அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களுக்கு புதிய...
பரஸ்பரம் விவாகரத்து கோரும் தம்பதிக்கு 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
admin - 0
கடந்த 2021-ல் மணமுடித்து வாழ்ந்து வந்த மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதி பரஸ்பர சம்மதத்துடன் அண்மையில் விவாகரத்து கோரினர். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கவுரி கோட்சே அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
பொதுவாக கணவன்-மனைவி இருவரில் யாரோ ஒருவர் மண முறிவு பெற வேண்டி நீதிமன்றத்தை நாடும்போது அவர்களுக்கு இடையில் சமரசம் ஏற்படுத்த நீதிமன்றம் முயலும். அதுவே தம்பதி கலந்து...
இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களின் பாதுகாப்பில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு முப்படைகளின் தளபதிகள், காவல் துறை தலைவர் பங்கேற்ற உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ராணுவத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க ஷேக் ஹசீனாவிடம் அறிவுறுத்தப்பட்டது.இதை அவர் ஏற்கவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவதளபதிகளுக்கும் காவல் துறைதலைவருக்கும் அவர்...
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய மண்டலத்தில் உள்ள மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் ‘குரூப் டி’ பதவிகளுக்கு பல்வேறு நபர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு வேலை வழங்க லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது....
நாடு முழுவதிலும் உள்ள வக்ஃப்கள் மீதான சட்டத்தில் 40 வகையான திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்த அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முயற்சித்து வருகிறது.
இதுதொடர்பாக ஆலோசனை நடத்த இணையதளம் வழியான கூட்டத்தை, நேற்று முன்தினம் இரவு, முஸ்லிம் தனிச்சட்ட வாரியம்நடத்தியது. இதன் தலைவரான மவுலானா காலீத் சைபுல்லா ரஹ்மானி தலைமையில் இந்தக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஹைதராபாத் எம்பியான அசாதுதீன் ஒவைசிமற்றும் அனைத்து...
ஆந்திராவுக்கு ஆக்ஸிஜன் அளித்தது போல் உள்ளது: ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கியதற்கு சந்திரபாபு நாயுடு நன்றி
admin - 0
மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநில தலைநகர் அமராவதி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி வழங்கப்பட உள்ளது.
பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்கு இம்முறை நிதிகளை அள்ளி கொடுத்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய அரசுக்கு உறுதுணையாக நிற்கும் சந்திரபாபு நாயுடு ஆளும் மாநிலமான ஆந்திர மாநிலத்திற்கு, பொருளாதார ரீதியாக நெருக்கடி உள்ளதால்,அதனை கவனத்தில் கொண்டும், மாநில பிரிவினை மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்த தலைநகரத்திற்கான நிதி, போலவரம் அணைகட்ட நிதி,...
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: புதிய வரி விகிதத்தை தேர்வு செய்யும் தனிநபர்களுக்கு வருமான வரி நிலைக்கழிவு ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படுகிறது. ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரியில்லை. ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதமும், ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம்,...








