குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடுமையான வெயிலால் நீர்நிலைகள் வறண்டு மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், இன்று மாலையில் குலசேகரம், திருவட்டார், அருமனை, திற்பரப்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி...
ஆரல்வாய்மொழியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞர் பலி
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் கனரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், டேவிட் சுஜன் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்த மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லங்கோடு: மாமியாரை தாக்கிய மருமகள் மீது வழக்கு
கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ஐடா ராஜபாய் (65) என்பவரின் மூக்கை, அவரது மருமகள் அசியா (27) வாக்குவாதத்தின் போது குத்தி உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஐடா ராஜபாய் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் மருமகள் அசியா மீது...
குமரியில்: ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தீவிர ஏற்பாடுகள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்காக, தொகுதி வாரியாக தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, 26 சுற்றுகளாக வாக்குகளை எண்ண தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்து...
குமரியில்: தேசிய மல்யுத்தப் போட்டிக்கு பள்ளி மாணவன் தேர்வு
மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர், தற்போது 17 வயதுக்குட்பட்டோர் தேசிய போட்டிக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார். வரும் 27-ஆம் தேதி...
அருமனை: கல்லூரி மாணவி மாயம் – போலீசில் புகார்
சிதறால், அம்பலக்கடை பகுதியைச் சேர்ந்த ராஜி மகள் ஆஷ்மி (18) ஆற்றூர் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால், பெற்றோர் பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை. மாணவியின் தாய் கலா அருமனை காவல் நிலையத்தில்...
தண்ணீர் குறைந்து வரும் முக்கடல் அணை
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது மைனஸ் 9.5 அடிக்கு நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால், புத்தன் அணையில் இருந்து தற்போது நாகர்கோவில் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குமரி – கேரளா எல்லையில் இளம் பெண் கொலை – கணவர் கைது
திருவனந்தபுரம் அருகே பாறசாலை பகுதியில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கணவன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு என்ற ஆசிரியரும், அல்மா என்ற அவரது மனைவியும் 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லாத நிலையில், அடிக்கடி ஏற்பட்ட தகராறில்...
குமரி மாவட்டத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 6 ரூபாய் வரை உயர்ந்த முட்டை, தற்போது மேலும் 50 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனை சந்தையில் ஒரு முட்டை 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு முட்டை...
பத்மநாபபுரம்: பெண் கொலை ; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள்
முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (50), பணியில் ஒழுங்கீனம் காரணமாக 2014-ல் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டவர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 7.2.2021 அன்று மேரி ஜெயா அமுதா என்ற பெண்ணைப் பின்தொடர்ந்து, அவரது கழுத்தில் இருந்த சங்கிலியைப்...













