மேலபெருவிளை பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் சஞ்ஜெய், சிறுவயதிலிருந்தே மல்யுத்த பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளைப் பெற்றுள்ள இவர், தற்போது 17 வயதுக்குட்பட்டோர் தேசிய போட்டிக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார். வரும் 27-ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்த சாதனை மாணவரை மூவேந்தர் பயிற்சிப் பள்ளி மாஸ்டர், கோச், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.














