திருவனந்தபுரம் அருகே பாறசாலை பகுதியில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கணவன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு என்ற ஆசிரியரும், அல்மா என்ற அவரது மனைவியும் 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லாத நிலையில், அடிக்கடி ஏற்பட்ட தகராறில் நேற்று ஆத்திரமடைந்த விஷ்ணு, மனைவியை கொலை செய்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விஷ்ணுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














