Google search engine
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது. மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல்...
மக்களவைத் தேர்தலில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பஞ்சாபில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உள்ளிட்ட காரணங்களால் ஆளும் ஆம் ஆத்மிக்கு இத்தேர்தல் சவாலாகியுள்ளது. பஞ்சாபில் 13 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 1-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பஞ்சாபில் கடந்த 2022 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பறித்தது. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் காங்கிரஸும் ஆம் ஆத்மி...
ஆந்திர அரசியலில் ‘ஃபயர்பிராண்ட்’ என்று அழைக்கப்படு பவர் நடிகையும் அமைச்சருமான ரோஜா. அரசியலில் காலூன்ற கணவர் ஆர்.கே செல்வமணியின் ஒத்துழைப்பே முழு காரணம் என அடிக்கடி ரோஜா சொல்வதுண்டு. தெலுங்கு தேசம் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ரோஜா, பின்னர் ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் அவர், தமிழக எல்லையில் ஆந்திரமாநிலத்தில் உள்ள நகரி சட்டமன்ற தொகுதியில் 2014-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்....
மேற்கு வங்க மாநிலம் மற்றும் அண்டை நாடான வங்கதேசம் இடையே 'ரீமல்' புயல் நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. அப்போது, அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. கனமழை, வெள்ளத்தால் மேற்கு வங்கத்தில் 6 பேரும், வங்கதேசத்தில் 10 பேரும் உயிரிழந்தனர். வங்கக்கடலில் உருவான 'ரீமல்' புயல் நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்க மாநிலம் மற்றும் அண்டை நாடான வங்கதேசம் இடையே கரையை கடந்தது. அப்போது...
எவரெஸ்ட் சிகரத்தில் சாகசவீரர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் இமயமலையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, அக்டோபர், நவம்பர் மாதங்களில் சாகச வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுகின்றனர். பொதுவாக நேபாள நாட்டில் உள்ள அடிவார முகாமில் இருந்து மலையேற்றம் தொடங்குகிறது. இந்த ஆண்டில் மே 21-ம் தேதி வரை நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட்...
உத்தராகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த சார் தாம் புனித யாத்திரையானது யமுனோத்ரியிலிருந்து தொடங்கி, கங்கோத்ரி, கேதார்நாத் வழியாகச் சென்று இறுதியாக பத்ரிநாத்தில் முடிவடைகிறது. இந்த பயணம் பொதுவாக ஏப்ரல் - மே முதல் அக்டோபர் - நவம்பர் வரை மேற்கொள்ளப்படும். இந்த இடங்களுக்கு மிகவும் ஆபத்தான வழிகளிலும் மோசமான வானிலையிலும் பக்தர்கள் பயணம்...
குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் 400 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மாண்ட சரக்கு கப்பல் நங்கூரமிட்டு உள்ளது. இது இந்தியாவுக்கு வந்த மிகப்பெரிய சரக்கு கப்பல் ஆகும். நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களில் மும்பை ஜேஎன்பிடி துறைமுகம் முதலிடத்தில் உள்ளது. குஜராத்தின் கட்ச் மாவட்டம், முந்த்ராவில் உள்ள துறைமுகம் 2-வதுஇடத்தில் இருக்கிறது. இந்த தனியார் துறைமுகத்தை அதானி குழுமம் நிர்வகித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலையில் எம்வி எம்எஸ்சி ஹம்பர்க் என்ற சரக்கு...
ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவாலின் பெற்றோர் மற்றும் மனைவியிடம் டெல்லி போலீஸ் குறுக்கு விசாரணை நடத்துவது பற்றி டெல்லிபோலீஸ் தரப்பு கூறியதாவது: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவால் அளித்த புகாரின் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாக தான் கேஜ்ரிவாலின் பெற்றோர் மற்றும் மனைவியிடம் பேசிக்...
முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணையை கட்ட அனுமதி கோரி மத்திய அரசிடம் கேரள அரசு விண்ணப்பித்து உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி பாயும் பெரியாறு அரபிக் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் நீரை கிழக்கு நோக்கி திருப்பி தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் பயன் அடைவதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1893-ம் ஆண்டில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. இந்த அணையின் கொள்ளளவு 15.5...
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என க‌ர்நாடக உள்துறை அமைச்சர் ப‌ரமேஸ்வர் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச‌ வீடியோக்கள் கடந்த 26-ம் தேதி வெளியானது. அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பேர் பிரஜ்வல்...