பிஜு ஜனதா தள கட்சியின் மாநில நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்: தேர்தல் தோல்வியை அடுத்து நவீன் பட்நாயக் நடவடிக்கை
admin - 0
ஒடிசா மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் தோல்வியின் எதிரொலியாக பிஜு ஜனதா தளம் கட்சியின் மாநில நிர்வாகிகளை கூண்டோடு மாற்றி அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பட்நாயக் நேற்று மேலும் கூறியதாவது: பிஜு ஜனதா தளம் கட்சியின் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர். அதேநேரம் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் தொடர்ந்து அதே பதவியில் நீடிப்பர். மாநில அளவில் புதிய...
உ.பி.யில் மசூதிகளில் இடமின்மை காரணமாக முஸ்லிம்கள் சாலைகளில் தொழுகை நடத்துவது சர்ச்சையானது. இதற்கு ஆதரவாக பீம் ஆர்மி எம்.பி. ராவண் என்கிற சந்திரசேகர் ஆசாத் கூறிய கருத்தைகாங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கண்டித்துள்ளார்.
ராஜஸ்தான் ஹரியாணா, உ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் வெள்ளிக்கிழமைகளில் மசூதிகள் நிரம்பி வழிவதால் முஸ்லிம்கள் சாலைகளில் தொழுகை நடத்தி வந்தனர். கரோனா பரவலுக்கு பிறகு ஹரியாணாவின் குருகிராமில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பிறகு உ.பி. மற்றும்...
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள மற்ற பகுதிகளில் கனமழை பொழியும் என ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, நவி மும்பை மற்றும் ஊரக பகுதிகளான ரத்னகிரி உள்ளிட்ட இடங்களில் இன்று (செவ்வாய்க் கிழமை)...
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் முடர்கம், சானிகம் ஆகிய கிராமங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. ராணுவ வீரர்கள், மத்திய பாதுகாப்பு படையினர், போலீஸார் இணைந்து கடந்த 6-ம் தேதி தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, முடர்கம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ...
உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவை பெரிய எழுத்தில் அச்சிட ஒப்புதல்
admin - 0
உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் சரக்கரை, உப்பு, கொழுப்பு சத்து அளவுகளை பெரிய எழுத்தில் அச்சிடும் திட்டத்துக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்க்கரை, உப்பு, கொழுப்பு சத்துக்கள் அதிகம் உள்ள பாக்கெட்உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதுதான் பல நோய்களுக்கு காரணம் எனவும், அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.அதனால்...
மலைப்பகுதியில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க ‘ஜோராவர்’ இலகுரக பீரங்கி தயார்: 2027-ல் ராணுவத்தில் சேர்க்கப்படும்
admin - 0
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமும் (டிஆர்டிஓ) எல் அண்ட் டி நிறுவனமும் இணைந்து ஜோராவர் இலகுரக பீரங்கியை தயாரித்துள்ளன. கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் போரில் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 25 டன் எடை கொண்ட இந்த பீரங்கி, குஜராத் மாநிலம் ஹசிராவில் நேற்று முன்தினம்பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
இந்த திட்டத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்த டிஆர்டிஓதலைவர் சமிர் கே. காமத்...
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ்நேற்று முன்தினம் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர், தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெங்கு பரவல் தொடர்பாக மாவட்டவாரியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அதில்மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.அதில் பெங்களூருவில் மட்டும் 2 ஆயிரத்துக்கும்மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெங்கு பரவல் காரணமாக பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை....
ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் ஆலம்கிர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: அமலாக்கத் துறை நடவடிக்கை
admin - 0
ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர்ஆலம்கிர் மற்றும் சிலர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ்அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் ரூ.4.42 கோடி சொத்தை முடக்கி உள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் ஆலம்கிர் ஆலம்,அவரது முன்னாள் தனிச் செயலாளர் சஞ்சீவ் குமார் லால், லால் மனைவி ரீட்டா மற்றும் வீட்டு பணியாளர் ஜஹாங்கிர் ஆலம் ஆகியோருக்கு சொந்தமான ரூ.4.42 கோடி...
நாடாளுமன்றத்தின் ஆம் ஆத்மி கட்சித் தலைவராக சஞ்சய் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக சஞ்சய் சிங் செயலாற்றி வருகிறார். இந்நிலையில் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கட்சியைச் சேர்ந்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சஞ்சய்சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகளில் சஞ்சய் சிங் மட்டுமே ஜாமீன் பெற்று வெளியே உள்ளார்.
இந்நிலையில் நேற்று ஆம்...
பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் (ஆர்ஜேடி) நிறுவனநாள் விழா நேற்று பாட்னாவில் நடைபெற்றது. விழாவில் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் பேசியதாவது:
நமது கட்சியின் ஆணி வேரானதொண்டர்களுக்கு ஒரு செய்தியைஇங்கு கூற விரும்புகிறேன். மீண்டும் மக்களவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடும். அதற்கு தொண்டர்கள் தயாராக இருக்கவேண்டும். மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது....










