Google search engine
இந்திய விமான நிறுவனங்களின் 25-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், டெல்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் பரபரப்பான நிலை காணப்பட்டது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றுவரும் விமானங்கள், உள்நாட்டில் இயக்கப்படும் விமானங்களுக்கு சமீபகாலமாக தொடர்ந்து குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 12 நாட்களில் மட்டும் இந்திய விமான நிறுவனங்களின் 275-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு குண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் விமானங்கள் அவசர தரையிறக்கம்,...
 ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் டானா புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து கிழக்கு வடகிழக்கே 50 கி.மீ தொலைவிலும், தாமராவில் இருந்து 40 கி.மீ தென்கிழக்கே மேற்கு வங்கத்தில் உள்ள சாகர் தீவில் இருந்து 160 கி.மீ தென்மேற்கிலும் நிலைகொண்டிருந்தது. இந்த சூழலில் நள்ளிரவில் கரையைக் கடக்க தொடங்கிய இந்த புயல், இன்று (அக். 25) அதிகாலை வரை கரையை...
தீபாவளி மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் 7 ஆயிரம் சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வேஸ் இயக்க உள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகைையில், “ இந்த ஆண்டு தீபாவளி மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு தினமும் கூடுதலாக 2 லட்சம் பேர் பயணம் செய்யும் வகையில் 7,000 சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்க உள்ளது" என்றார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,...
ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்து பேசியது இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் மிக முக்கியமானது என சீன கூறியுள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் கடந்த புதன் கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இரு தரப்பு...
உத்தரபிரதேச இடைத்தேர்தலில் 9 தொகுதிகளிலும் சமாஜ்வாதியே போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கிடைத்த 2 தொகுதிகளையும் மறுத்துவிட்டது. இதன் பின்னணி வெளியாகி உள்ளது. சமீபத்தில் முடிந்த மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் இண்டியா கூட்டணிக் கட்சிகளாக காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து உ.பி. சட்டப்பேரவையில் காலியாக உள்ள 9 இடங்களுக்கான தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் 4 தொகுதிகளை கோரிய...
ஆந்திரா, தெலங்கானா, பிஹார் ஆகிய 3 மாநிலங்களில் ரூ.6,798 கோடி மதிப்பிலான 2 ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, பிஹாரில் சர்கத்தியா நர்கதியாகஞ்ச் - ரக்சால்- சீதாமர்ஹி - தர்பங்கா மற்றும் சீதாமர்ஹி - முசாபர்பூர் இடையே 256 கி.மீ. மற்றும் எர்ருபாளையம் - நம்பூரு இடையே அமராவதி வழியாக தெலங்கானாவையும் இணைக்கும் வகையில் 57 கி.மீ.க்கு புதிய பாதை அமைக்கப்பட உள்ளது. ஆந்திரா, தெலங்கானா,...
பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பெரும்பாலான மிரட்டல்கள் சமூக வலைதளங்கள் மூலமாக அதிலும் குறிப்பாக எக்ஸ் வலைதளத்தின் வழியாக அதிகமான மிரட்டல்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: ஏர் இந்தியா, விஸ்டாரா, இண்டிகோ நிறுவனங்களைச் சேர்ந்த தலா 20-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதேபோன்று ஆகாஸா ஏர் நிறுவனம் தனது...
கர்நாடகாவில் சென்னபட்டணா இடைத்தேர்தலில் பாஜக முன்னாள் எம்எல்சி யோகேஷ்வரை காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. அவருக்கு போட்டியாக மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் பாஜக, மஜத கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனால் சென்னபட்டணா இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னபட்டணா தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதால், தனது...
ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று முதல்வர் உமர் அப்துல்லாவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அப்போது ஜம்மு- காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இந்த சூழலில் அண்மையில் நடந்த ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி...
 உத்தராகண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்கள் மீதுநீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. சில மாநிலங்களில் குற்றச் செயலில்ஈடுபடுவோருக்கு சொந்தமான கட்டிடங்களை (விதிகள் மீறப்பட்டிருப்பதாகக் கூறி) உள்ளாட்சி நிர்வாகத்தினர் இடித்தனர். இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அனுமதி இல்லாமல் இதுபோன்ற கட்டிடங்களை இடிக்கக் கூடாது என செப்டம்பர் 17-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில்...