Google search engine
பிஹாருக்கு மத்திய அரசு சிறப்புஅந்தஸ்து அளிக்க மறுத்துவிட்டாலும் தாராளமாக நிதியுதவி அளித்துள்ளது. பிஹாரில் பல்வேறு சாலை திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.26,000 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது: பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் முழு வளர்ச்சிக்காக பூர்வோதயா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும். அமிர்தசரஸ் - கொல்கத்தா தொழில் வழித்தடத்தில், பிஹாரில் உள்ள...
இளநிலை மருத்துவ படிப்புக்கானநீட் தேர்வு முடிவை ரத்துசெய்ய உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 23 லட்சத்து 33,297 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது. இதில் மொத்தம் 13 லட்சத்து 16,268 (56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மேலும் இதுவரை இல்லாத அளவில் 67...
மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு பல சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதை முன்கூட்டியே உணர்த்தும் வகையில்ஆந்திராவின் பிரபல கைத்தறி பருத்தி ஜவுளிகளில் ஒன்றான மங்களகிரி சேலையை அமைச்சர் நிர்மலா உடுத்தியிருந்தார். தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தில் பிறந்து டெல்லியில் வளர்ந்த அமைச்சர் நிர்மலா, ஆந்திராவின் மருமகள். இவரது கணவர் பாரகலா பிரபாகர். நிர்மலாவின் கைத்தறி சேலை, சற்றே மங்கலான வெள்ளை நிறத்தில் பெரிய கட்டங்களுடனான வடிவத்தில் இருந்தது. இதன் எதிர்மறை நிறமாக வயலட்டில் சேலைஓரங்கள்...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது: நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பது நாடு முழுவதும் அறிந்த செய்தியாக உள்ளது. ஆனால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த பிரச்சினைகளுக்கு தன்னைத் தவிர மற்ற அனைவர் மீதும் குற்றம்சாட்டி வருகிறார். நாட்டில் உள்ள லட்சக்கணக் கான மாணவர்கள் இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என்ற கவலையுடன் உள்ளனர். இந்தியாவின் தேர்வு முறை...
பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம், கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹாரின் ஜாஞ்சர்பூரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. ராம்பிரித் மண்டல், பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்க பிஹார் மற்றும் பின்தங்கிய மாநிலங்களுக்கு...
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ குடகு, மைசூரு, ஷிமோகா, மண்டியா ஆகிய இடங்களில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்துவருகிறது. இதனால் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர் (கேஆர்எஸ்) அணைக்கு வினாடிக்கு 60 ஆயிரத்து 770 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.இதனால் 124.80 அடி உயரம்உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.15 அடியைஎட்டியது. அணை முழுவதுமாகநிரம்பியுள்ளதால், அணையில் இருந்து 55 ஆயிரம் கனஅடி...
பெரும்பாலான வட மாநிலங்களில் நீர்வளம், மனிதவளம் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் அதிக அளவில் உள்ளன. இருப்பினும், வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் தொழில் மற்றும் வர்த்தகத்தின் நிலை சிறப்பாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, பாஜக ஆளும் மாநில அரசுகள், தமிழ்நாட்டை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்களை தங்கள் மாநிலங்களில் தொழில் தொடங்க வைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில் உத்தரப் பிரதேச...
தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றதும், முதன்முதலில் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கினார். இந்த புகைப்படம் வைரலாக பரவியது. முதல்வருக்கு நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்தது. இந்த சூழலில் தெலங்கானா ஐஏஎஸ் அதிகாரியான ஸ்மிதா சபர்வால், மாற்றுத் திறனாளிகள் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.ஏஐஎஸ் எனப்படும் அகில இந்திய சர்வீஸ்களான ஐபிஎஸ், ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளில்...
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வருபவர் வசந்த் சர்மா. இந்திய ரயில்வேயில் பணியாற்றி வரும் இவருக்கு கடந்த 18-ம் தேதி காலை 11.30 மணிக்கு உ.பி. மின் வாரியத்திலிருந்து ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் மின் கட்டண பில் தொகைரூ.4,02,31,842 என குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். வழக்கமாக அவர் மாதந்தோறும் ரூ.1,490-ஐ மின் கட்டணமாக செலுத்துவார்.இதுகுறித்து மின் வாரிய செயல் பொறியாளர் சிவா திரிபாதி கூறும்போது,...
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இடம்பெற்றுஉள்ள இண்டியா கூட்டணி 234 இடங்களில் வென்ற நிலையில்,ராகுல் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். இதையடுத்து, நாடாளுமன்றக் கூட்டங்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் கடும் விமர்சனத்தை ராகுல் முன்வைத்து வருகிறார். இந்நிலையில்,ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: பொதுவாக தேர்தலில் வென்றகட்சிகள் அகங்காரத்துடன் செயல்படுவதைப் பார்த்திருக்கிறேன்.இப்போதுதான் முதன்முறையாகதேர்தலில் தோற்ற...