மகாராஷ்டிர தேர்தல்: சிவசேனா முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0
24

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சிவசேனா கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பிரிந்து முதல்வர் ஷிண்டேவுடன் இணைந்த 40 எம்எல்ஏ.க்களும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சிவசேனா 45 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்டது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த தொகுதியான தானேவில் உள்ள கோப்ரி பச்பகாடி தொகுதியில் போட்டியிடுகிறார். சிவசேனா கட்சியில் தற்போதைய எம்எல்ஏ.க்களில் எம்.பி.க்கள் ஆனவர்களை தவிர மற்ற அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த எம்எல்ஏ.க்களின் குடும்பத்தின ருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here