“உள்துறை அமைச்சர் ஒன்று சொல்கிறார், மசோதாவோ வேறொன்று சொல்கிறது” – கனிமொழி பேச்சு

0
16

நா​டாளு​மன்ற சிறப்​புக் கூட்​டத்​தில் மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தா, தொகுதி மறுவரையறை மசோதா குறித்த விவாதத்​தின் போது, திமுக எம்​.பி. கனி​மொழி நேற்று பேசி​ய​தாவது: மகளிர் இடஒதுக்​கீடுக்கு ஆதர​வானவை போல வரும் 3 மசோ​தாக்​களும், இந்​தி​யா​வின் கூட்​டாட்சி அமைப்​பின் மீது தொடுக்​கப்​படும் மிகக் கடுமை​யான தாக்​குதல்.

மக்​கள்​தொகை​யைக் கட்​டுப்​படுத்த வேண்​டும் என்ற மத்​திய அரசின் அழைப்பை தென் மாநிலங்கள் ஏற்றன. அதனால் எங்​கள் மாநிலங்​களில் மக்கள் தொகை குறைந்தது. இப்​போது நாம் ஏன் இடங்​களை 850 ஆக அதி​கரிக்க வேண்​டும்?

நீங்​கள் தொகுதி மறு​வரையறை செய்ய 15 வருடங்கள் பழமை​யான 2011 மக்​கள்​தொகைக் கணக்​கெடுப்​புத் தரவைப் பயன்​படுத்​துகிறீர்​கள். 850 இடங்​கள் விஷ​யத்​தில் நீங்​களே உங்​களுக்கு முரண்​படு​கிறீர்​கள். தமிழ்​நாட்​டுப் பெண்​கள் கல்​வியறிவு பெற்​றவர்​களாகத் திகழ்​கின்​றனர். 1971 முதல் உத்தர பிரதேசத்​தின் மக்​கள் தொகை 120% அதி​கரித்​துள்​ளது. தமிழ்​நாட்​டின் மக்​கள் தொகை 15% மட்​டுமே அதி​கரித்​துள்​ளது.

மேலும், உள்​துறை அமைச்​சர் கூறியதற்கு மாறாக, மசோ​தா​வின் 4-வது பிரிவு, சமீபத்​திய மக்​கள் தொகை கணக்​கெடுப்பு புள்​ளி​விவரங்​களின் அடிப்​படை​யில் இட ஒதுக்​கீடு செய்​யப்​படும் என்று தெளி​வாகக் கூறுகிறது. உள்​துறை அமைச்​சர் ஒன்று சொல்​கிறார், மசோ​தாவோ வேறொன்று சொல்​கிறது.

2011 சூத்​திரத்​தின்​படி, உ.பி. 13 இடங்​களைப் பெறுகிறது. தமிழ்​நாடு 11 இடங்​களை இழக்​கிறது. ஆனால் நேற்று உள்​துறை அமைச்​சர், 50% அதி​கரிப்​ப​தன் மூலம் 39 இடங்​களைக் கொண்ட தமிழ்​நாடு மாநிலம் 59 இடங்​களைப் பெறும் என்​கிறார். நீதி என்​பது ஒவ்​வொரு​வருக்​கும் ஒரே மாதிரி​யானதைக் கொடுப்​பது அல்ல, நீதி என்​பது ஒவ்​வொரு​வருக்​கும் அவர்​களுக்​குத் தேவை​யானதை​யும், அவர்​கள் தகு​தி​யானதை​யும் கொடுப்​பது​தான்.

எனவே இந்த மூன்று மசோ​தாக்​களை​யும் உடனடி​யாகத் திரும்​பப் பெற்​று, அனைத்து மாநிலங்​கள் மற்​றும் அனைத்​துக் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களை​யும் உள்​ளடக்​கிய ஒரு கூட்டு நாடாளு​மன்​றக் குழு​வுக்கு அனுப்ப வேண்​டும். 25 ஆண்டு கால தேர்​தல் வரைபடத்தை 48 மணி நேரத்​தில் ஒரு சிறப்பு அமர்​வின் மூலம் அவசர​மாக நிறைவேற்ற வேண்​டாம். தொகுதி மறு​வரையறைக்​கான கட்​டமைப்பு குறித்து வி​வா​திக்க அனைத்து மாநில முதல்​வர்​களை​யும் கொண்ட ஒரு அரசி​யலமைப்பு மா​நாட்​டைக் கூட்​ட வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here