அயோத்தி கர்சேவக்புரத்தில் இருந்த தங்கம், வைரம், வெள்ளி, அஷ்ட தாதுவால் ஆன 1,250 புனித கற்கள் மாயமானதாக புகார்

0
20

உத்​தரப்​ பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி கோயி​லில் இருந்து காணிக்கை திருடப்​பட்​ட​தாக அண்மையில் புகார் எழுந்​தது. இதுகுறித்து 3 பேர் கொண்ட சிறப்பு புல​னாய்வு குழு விசா​ரித்து வரு​கிறது. இந்​நிலை​யில், தர்​மசேனா அமைப்​பின் தலை​வர் சந்​தோஷ் துபே ஒரு புதிய புகாரை அயோத்தி காவல் நிலை​யத்​தில் அளித்​துள்​ளார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: 1989-ல் துவங்​கிய ஸ்ரீ​ராம ஜென்​ம பூமி கோயில் போராட்​டக் காலங்​களில் நன்​கொடை திரட்​டப்​பட்​டது. அப்​போது கோயில் கட்​டு​மானப் பணிக்​காகப் புனித​மான கற்களும் கோரப்​பட்​டன. இந்​தியா மற்​றும் வெளி​நாடு​களில் வழிபாடு செய்​யப்​பட்டு அயோத்​திக்கு விலைம​திப்​பிலான 1,250 கற்​கள் கொண்​டு​வரப்​பட்​டன. இவை, தங்​கம், வெள்​ளி, வைரம் மற்​றும் அஷ்ட​தாது எனப்​படும் 8 உலோகங்​களின் கலவை​யால் ஆனவை.

கடந்த 25 ஆண்​டு​களுக்கு முன்பு வரை அயோத்தி கர்​சேவக் புரத்தில் இருந்த இவற்றை தற்​போது காண​வில்​லை. ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்​கட்​டளை அமைக்கப்பட்டபோது இதனுடன் பழைய அறக்​கட்​டளை இணைக்கப்​பட்​டது. அப்போது பழைய அறக்​கட்​டளை கணக்​கில் ரூ.8.5 கோடி காட்​டப்​பட்​டிருந்​தது. அந்த சமயத்​தி​லும் விலைமதிப்பற்ற கற்​களைப் பற்றி எந்​தக் குறிப்​பும் இல்​லை. இவ்வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

இந்​தப் புகாரை இது​வரை பதிவு செய்​யாத அயோத்தி போலீ​ஸார் இதற்​கான ஆதா​ரங்​களை திரட்டி வரு​கின்​றனர். ராமர் கோயிலுக்கான வரவு, செலவு தணிக்கை கணக்​கிலும் தவறுகள் நடை​பெற்​ற​தாக புகார்​கள் எழுந்​துள்​ளன. இதனால் கடந்த 5 ஆண்டு​களில் கோயி​லின் நன்​கொடைகள், தணிக்கை அறிக்கைகள், வங்​கிக் கணக்​கு​கள் மற்​றும் நிலக் கொள்​முதல்​ குறித்​த முழு​மை​யான விவரம்​ கோரப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here