திருவட்டார் ஊராட்சி உதவியாளர் திடீர் மாயம்.. போலீசார் விசாரணை
திருவட்டார் அருகே உள்ள கோணங்காடு பகுதியை சேர்ந்தவர் அரிச்சந்திரன் மகன் சுஜின் (29). இவர் திருவட்டார் ஊராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் சுஜினுக்கு சற்று மன நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவமனையில்...
நடந்து சென்ற எல்கேஜி மாணவி மீது டெம்போ மோதல்
திருவட்டாறு அருகே தோட்டவாரம் பகுதியை சேர்ந்தவர் பெர்ஜின் குமார் (33). இவர் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் அஹானா, சிதறால் பகுதியில் உள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். சிறுமியின் தாத்தா பிரான்சிஸ் டீக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 27ஆம்...
சுசீந்திரம் அம்மன் ஊர்வலம்.. துவக்கி வைத்த மத்திய அமைச்சர்
நவராத்திரி விழாவை முன்னிட்டு குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்கு, பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சாமி சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வது பாரம்பரிய வழக்கம்.
இதன்படி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் இன்று (30ம் தேதி) காலை சுசிந்திரம் கோயிலில் இரு மாநில போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் பத்மநாபபுரம் அரண்மனைக்கு புறப்பட்டது. இந்த...
வாகன தணிக்கையில் அதிரடி காட்டிய குமரி போலீசார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று (செப்.,27) போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளுக்கு மீறி வாகன ஓட்டிய இளைஞர்களுக்கு அபராதம் விதித்து, அவர்களது பெற்றோரை வரவழைத்து அறிவுரை வழங்கி இருசக்கர வாகனத்தை கொடுத்து அனுப்பிய...
பள்ளி மாணவன் மீது மோதிய போலீஸ் வாகனம்: விசிக மனு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சுதீஷ் என்ற மாணவன் மீது போலீஸ் வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் சிறுவனின் காலில் முறிவு ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகர்கோவில் மாவட்ட காவல்...
நாகர்கோவில்: குழந்தையை மீட்டுத் தர தாய் தர்ணா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச்ரோடு பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா என்ற பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வருகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு அதிகாரிகள் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...
நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலை திருவனந்தபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலும் செல்கிறது. இதில் நித்திரவிளை அருகே உள்ள விரிவிளை முதல் கணபதியான்கடவு ஆற்றுப்பாலம் வரையில் சாலை மிகவும் அகலம் குறைவாக காணப்படுவதால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் சூழ்நிலை ஏற்பட்டது.
எனவே சாகலையை...
கொலை முயற்சி வழக்கு; குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை
நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சாந்தி என்பவரது மகன் டேவிட். கடந்த 2015 ஆம் ஆண்டு முன் விரோதம் காரணமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக 7 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில்...
நாகர்கோவிலில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை மறு வரையறை செய்திடவும், கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை பாது காத்திட வேண்டியும், வருமானவரி உச்ச வரம்பை ரூ. 10...
தகாத வார்த்தை பேசி வக்கீலை அரிவாளால் வெட்டிய இளைஞர்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடுகன்பற்றை கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 47). தற்போது இவர் நாகர்கோவில் நேசமணிநகர் ஹென்றி ரோடு பகுதியில் வசித்து வருகிறார். நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றுகிறார்.
சம்பவத்தன்று நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவர் சீனிவாசனுக்கு போன் செய்து தனது...












