கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆட்சியர் அழகுமீனா மீனவ மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.