நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலா என்பவர் நேற்று காலையில் சிலருடன் வந்து குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டம் நடத்தினார். இதுகுறித்து அவர் போலீசாரிடம் தெரிவிக்கையில், நான் பொழுதுபோக்கு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறேன். எனக்குச் சொந்தமான ராட்டினத்தை ஒருவர் பயன்படுத்த கொடுத்திருந்தேன். அந்த ராட்டினத்தை பயன்படுத்தியவருக்கும், சிலருக்கும் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்தது. இந்தநிலையில் அந்த ராட்டினத்தை சிலர் தூக்கிச் சென்றனர். இந்த ராட்டினம் நாகர்கோவிலில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதனை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். பின்னர் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.