கன்னியாகுமரி மாவட்டத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருக்களிலும் சாலைகளிலும் நாய்கள் அதிக அளவில் நடமாடுவதால் பொதுமக்களை அவை கடித்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாவட்டத்தில் 339 பேர்களை நாய்கள் கடித்துள்ளன. இதில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 25 பேரை நாய் கடித்துள்ளது. இந்த தகவலை கன்னியாகுமரி மாவட்ட கொள்ளை நோய் அலுவலர் டாக்டர் கிங்சால் நேற்று தெரிவித்தார்.