திருவட்டார் அருகே தோட்டவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சௌமியா (19). இவர் அந்தப் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று சௌமியா கல்லூரிக்குச் செல்வதாக தனது தாயாரிடம் கூறிவிட்டுச் சென்றார். சென்ற சிறிது நேரத்தில் அவரது தாய் அகிலா என்பவரின் செல்போனுக்கு மெசேஜ் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் என்னைத் தேட வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சௌமியாவின் தாயார் அகிலா கல்லூரிக்குச் சென்று மகளைப் பார்த்தபோது அவர் கல்லூரிக்கு வராததைத் தெரிந்துகொண்டார். மேலும் பல்வேறு இடங்களைத் தேடியும் சௌமியா தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அகிலா திருவட்டாறு போலீசில் மகளைக் கண்டுபிடித்துத் தர புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சௌமியாவைத் தேடிவருகின்றனர்.