குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளி சந்தை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சரல் முதல் சாத்தான்கோவில் குளம் வரை உள்ள கால்வாயை அகலப்படுத்தும் பணியை கலெக்டர் அழகு மீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வேலைக்கு வந்த பெண்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ், பிரேமலதா மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனிருந்தனர்.















