பள்ளியாடி அருகே வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சுதா (55) என்பவர், தீராத நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால் விரக்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















