தக்கலை அருகே கல்லுவிளையை சேர்ந்த தொழிலதிபர் மரியஅருள் (50), வீட்டில் தனியாக வசித்து வந்தார். தக்கலை அருகே உள்ள கல்லுவிளையை சேர்ந்தவர் மரியஅருள் (வயது50), தொழிலதிபர். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. மனைவி சென்னையில் ஆசிரியையாகவும், மகன் அரசு வங்கியில் மேலாளராகவும் பணியாற்றி வருகிறார்கள். மேலும் மகள் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக உள்ளார். இதனால் மரியஅருள் கல்லுவிளையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை வீட்டின் சுற்றுச்சுவர் கதவு அருகே அவர் உயிரிழந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்து வந்த தக்கலை போலீசார் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில் வீட்டின் முன் தடுமாறி விழுந்ததால் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.















