கொல்லங்கோடு அருகே கோனசேரி புனித அந்தோனியார் குருசடி மற்றும் பிராகோடு பரிதர்மசாஸ்தா கோவிலில் உள்ள உண்டியல்களை உடைத்து திருடியதாக கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று (29-ம் தேதி) மாலை ஊரம்பு சந்திப்பில் வைத்து உண்டியல் திருட்டில் சம்பந்தப்பட்ட மேல்பாலை பகுதியைச் சேர்ந்த விபின் (35) என்பவரை கொல்லங்கோடு போலீசார் கைது செய்தனர். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் உண்டியல் திருட்டு வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.