கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலையத்தில் இன்று(நவ. 28) காத்துநின்ற பெண்மணி ஒருவர் தான் வைத்திருந்த மணிப்பர்சை தவறவிட்டுவிட்டார். அதில், ஆயிரக்கணக்கில் பணம் இருந்தது, உடனடியாக வடசேரி புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு தவறவிட்ட மணிப்பர்சை மீட்டுக்கொடுத்தனர், உடனே அந்த பெண்மணி போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.