பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ்-அன்புமணி இடையே முழுமையான உடன்பாடு ஏற்படாத நிலையில், பாமக தலைவர் அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சமூக நீதிப் பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் 20 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை கட்சியில் இருந்து நிறுவனர் ராமதாஸ் நீக்கியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரிடையே இன்னும் முழுமையான சமரசம் ஏற்படவில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்களும் பலமுறை முயற்சித்தும், முழு உடன்பாடு...
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகள் அமைக்கலாம்; பூஜை கூடாது – நீதிமன்றம் உத்தரவு
admin - 0
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்கலாம், ஆனால் பூஜைகள் நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் பக்தியை வளர்க்க முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டு...
சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை, புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
நேற்று சென்னை, புறநகர் பகுதிகளில் காலை முதலே கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. பின்னர் மாலை நேரத்தில் இருள் சூழ்ந்து, புறநகர் பகுதிகளான திருப்போரூர், தாம்பரம், கேளம்பாக்கம், சோழிங்கநல்லூர், புழல், அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில், பூந்தமல்லி...
2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது. அப்போதுதான் தவறு நடந்தால், ஒரு எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்ட முடியும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட விஜயகாந்த் மீதான இரங்கல் தீர்மானத்துக்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரிகம். 2 நாட்களில் கூட்டம் நடத்தப்பட்டு 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு...
சேலத்துக்கு 2 நாள் பயணமாக நாளை (ஜூன் 11) வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 கி.மீ. ரோடு ஷோவில் பங்கேற்கிறார். 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக சேலத்துக்கு நாளை வருகிறார். காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் கோவை வரும் முதல்வர் அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை செல்கிறார்.
அங்கு...
கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த இந்து பிரச்சாரகர் ராம.ரவிகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 27 கோயில்களில் ரூ.80 கோடி செலவில் திருமண மண்டபம் கட்டப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி பழனி முருகன் கோயிலின் உப கோயிலான கள்ளிமந்தையம்...
வாகன உற்பத்தி, அறிவுசார் பொருளாதாரம் உள்ளிட்ட திட்டக்குழுவின் 4 அறிக்கைகள் முதல்வரிடம் சமர்ப்பிப்பு
admin - 0
மாநில திட்டக்குழு தயாரித்துள்ள 4 அறிக்கைகளை முதல்வர் ஸ்டாலினிடம், திட்டக்குழு துணை தலைவரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
ஊரக பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள், வாகன உற்பத்தி துறையின் எதிர்காலம், அறிவுசார் பொருளாதாரம் ஆகியவை தொடர்பாக 4 அறிக்கைகளை மாநில திட்டக்குழு தயாரித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் இந்த அறிக்கைகளை திட்டக்குழுவின் அலுவல்சார் துணை தலைவரான துணை முதல்வர் உதயநிதி...
மெட்ரோ ரயில் தலைமையக கட்டிடத்தில் ஏசி-யில் வெளியாகும் நீரை மறுபயன்பாடு செய்யும் ஆலை திறப்பு
admin - 0
சென்னை மெட்ரோ ரயில் தலைமையகக் கட்டிடத்தில் ஏசி-யில் இருந்து வெளிவரும் தண்ணீரை சேகரித்து மறுபயன்பாடு செய்யும் ஆலை நிறுவப்பட்டுள்ளது.
சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமையக் கட்டிடம், முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த 2022-ம் ஆண்டு அக்.27-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த அலுவலகம், ஒரு அடித்தளம் மற்றும் 12 மாடிகளைக் கொண்டது. மேலும், இந்தக் கட்டிடம் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏசியில் இருந்து வெளியேறும் நீரை...
எருதுக்கு நோவாம் காக்கைக்கு கொண்டாட்டமாம் என்று ஒரு சொலவடை சொல்வார்கள். விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக-வில் இப்போது நடக்கும் விஷயங்கள் அப்படித்தான் இருக்கிறது.
ஒரு காலத்தில் ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்ட திமுக-வுக்கே செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி இப்போது எந்தப் பதவியும் இல்லாமல் இருக்கிறார். விழுப்புரம் தெற்கு மாவட்டத்துக்கு இவரது மகனும் எம்பி-யுமான கவுதமசிகாமணி செயலாளராக இருக்கிறார். பொன்முடி விழுப்புரம் மாவட்ட திமுக-வின் அசைக்க முடியாத அதிகார மையமாக...
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் பொறுப்பேற்று ஐந்தாண்டுகள் ஆகும் நிலையில், வாரக் கடைசியில் மட்டுமே கட்சி நடவடிக்கைகளுக்காக திருப்பூருக்கு வந்து செல்வதைச் சுட்டிக்காட்டி, ‘வீக் எண்ட்’ மாவட்டச் செயலாளர் என அதிமுக-வுக்குள் இருக்கும் சிலரே அவரை சத்தமில்லாமல் கலாய்க்கிறார்கள்.திருப்பூர் அதிமுக-வுக்குள் இருக்கும் கோஷ்டி பூசலை சமாளிக்க பொள்ளாச்சியிலிருந்து ஜெயராமனை திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராக இறக்குமதி செய்தது அதிமுக தலைமை. இந்த நிலையில், குடும்பத்தை...










