கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்ட தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

0
43

கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்த இந்து பிரச்சாரகர் ராம.ரவிகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 27 கோயில்களில் ரூ.80 கோடி செலவில் திருமண மண்டபம் கட்டப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி பழனி முருகன் கோயிலின் உப கோயிலான கள்ளிமந்தையம் வரதராஜ பொருமாள் கோயிலுக்கு சொந்தமான காலியிடத்தில் ரூ.6.30 கோடியில் திருமணம் மண்டபம் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

எனவே, கோயில் நிதியில் திருமண மண்டபங்கள் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு 16.5.2025-ல் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் கோயில் நிதியில் திருமணம் கட்டுவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here