ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆக் ஷன் அட்வென்சர் காமெடி படத்தில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள இப்படத்துக்குக் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படம் ஜூலை 31-ல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.















