கோடை வெப்ப நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் தயார் நிலையில் 360 சுகாதார நிலையங்கள்

0
29

கோடை வெப்​பத்​தால் ஏற்​படும் நோய்​களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநக​ராட்சி சார்​பில் 360 சுகா​தார நிலை​யங்​கள் தயார் நிலை​யில் இருப்​ப​தாக மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்​தில் கடந்த சில நாட்களாக கோடைவெப்​பம் அதி​கரித்து வருகிறது. கோடை வெயிலால் அதிக வியர்வை வெளி​யேறும்​போது உடலில் உப்​புச்​சத்து மற்​றும் நீர்ச்​சத்து பற்​றாக்​குறை ஏற்​படு​கிறது.

இதனால் அதிக தாகம், தலை​வலி, உடல்​சோர்​வு, தலைசுற்​றல், தசைப்​பிடிப்​பு, குறைந்த அளவு சிறுநீர் வெளி​யேற்​றம், மயக்​கம் மற்​றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்​படலாம். பச்​சிளம் குழந்தைகள், சிறு​வயது குழந்​தைகள், கர்ப்​பிணி பெண்​கள் மற்​றும் முதி​ய​வர்​கள் அதி​கள​வில் பாதிப்படைய வாய்ப்​புள்​ளது.

அதிக அளவில் மோர், உப்பு மற்​றும் மோர் கலந்த அரிசிக்​கஞ்​சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்​சாறு மற்​றும் ஓஆர்​எஸ் உப்​புக்​கரைசல் ஆகிய​வற்றை பருக வேண்​டும்.

வெளியே செல்​லும்​போது, திறந்​தவெளி​யில் வேலை செய்யும்​போது தலை​யில் பருத்தி துணி, துண்​டு, தொப்பி அணிந்து கொள்ள வேண்​டும். தேவை​யில்லாமல் வெயி​லில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்​டும்.

தீவிர மயக்​கம், உடல் சோர்​வு, அதிக அளவு தாகம், தலை​வலி, கால், மணிக்​கட்டு அல்​லது அடி வயிற்​றில் வலி ஏற்​பட்​டால் மருத்​துவ உதவியை நாட​வேண்​டும். நாடித்​துடிப்​பு, இதயத்​துடிப்​பு, சுவாசம் ஆகிய​வற்றை பரிசோ​திக்க வேண்​டும்.

சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட 140 நகர்ப்​புற ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், 200 நகர்ப்​புற நலவாழ்வு மையங்​கள், 16 நகர்ப்​புற சமூக நல மையங்​கள், 3 மகப்​பேறு மருத்​து​வ​மனை​கள், தொற்று நோய் மருத்​து​வ​மனை என மொத்​தம் 360 சுகா​தார நிலை​யங்​கள் வெப்​பம் தொடர்​பான நோய்​கள் குறித்து சிகிச்சை வழங்​கு​வதற்கு தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. வெயில் அதி​கம் உள்ள நேரங்​களில் 57 வீடற்​றோர் காப்​பகங்​களில் பொது​மக்​கள் தங்​கிக் கொள்​ளலாம்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here