குமரி: காதல் திருமணம் செய்த மகளின் வீட்டை சூறையாடிய தந்தை
கொற்றிக்கோடு பகுதியைச் சேர்ந்த வேளிமலை எஸ்டேட் மேற்பார்வையாளர் சிசிலின் மகள் சீமா, அதே பகுதியைச் சேர்ந்த லாலின் என்பவரைக் காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சிசில் மற்றும் அவரது நண்பர்கள் இருவர், காதலன் வீட்டிற்குச் சென்று அங்கு இல்லாததால், வீட்டை உடைத்து சூறையாடினர். இது...
தக்கலை: ஒடும் பஸ்ஸில் இளம் பெண்ணிடம் நகை பறிப்பு
களியல் பகுதியைச் சேர்ந்த ஹனீஸ் பாத்திமா (25) என்பவர் நேற்று வேலை முடிந்து தக்கலை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அவரது கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அவர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார்...
பேச்சிப்பாறை: டெம்போ கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
பேச்சிப்பாறை பழங்குடியினர் கிராமப் பகுதியில் இருந்து நேற்று மாலை ரப்பர் தடிகளை ஏற்றிக்கொண்டு வந்த டெம்போ திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகன டிரைவர் அஜில்குமார் (44) படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு...
பள்ளியாடி: மின்வாரிய ஊழியரை வெட்டிய தூய்மை பணியாளர்
கிள்ளியூர் பள்ளியாடி பகுதியை சேர்ந்த ஜான்சுந்தர் மற்றும் அவரது தம்பி ஜெயக்குமார் இடையே குடும்பத் தகராறு இருந்துள்ளது. தூய்மை பணியாளரான ஜெயக்குமார், நேற்று மாலை தனது அண்ணன் வீட்டில் மின்வாரிய ஊழியர் அரவிந்த் பணி செய்ய சுவரில் ஏறியதைக் கண்டு தகராறு செய்து, அரிவாளால் அவரது காலில்...
கிராத்தூர்: விபத்தில் நகராட்சி ஊழியர்கள் 2 பேர் படுகாயம்
கொல்லங்கோடு நகராட்சியில் ஊழியர்களாக பணிபுரியும் விஷ்ணு (26) மற்றும் மணிகண்டன் நேற்று பணி முடிந்து கிராத்தூர் பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பூத்துறை பகுதியைச் சேர்ந்த விபின் ஓட்டி வந்த மற்றொரு பைக் நகராட்சி ஊழியர்களின் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த...
அருமனை: குப்பை கிடங்கில் தீயில் கருகிய தொழிலாளி சாவு
கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள தனியார் மது பார் அருகே குப்பை கிடங்கில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அருமனை பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (60) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 60% தீக்காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. மது...
சூழால்: நூறு நாள் வேலை ; எம்எல்ஏ பாதயாத்திரை
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, திட்டம் முடக்கப்படுவதாகக் கூறி, மத்திய பாஜக அரசை கண்டித்து கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் கிராம பஞ்சாயத்துக்கள் தோறும் காங்கிரஸ் பாதயாத்திரை நடத்துகிறது. நேற்று சூழால் ஊராட்சி ஊரம்பு ஜங்சனிலிருந்து ராஜேஷ்குமார் எம் எல் ஏ...
புதுக்கடை: தலைமறைவு குற்றவாளியை பிடிக்க கோர்ட் உத்தரவு
இனயம் புத்தன்துறை பகுதியைச் சேர்ந்த சதாம் மாலிக் மீது புதுக்கடை காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இதுவரை நீதிமன்ற விசாரணையில் ஆஜராகவில்லை. இந்நிலையில், அவரை 10.03.2026 அன்று குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குழித்துறை கூடுதல் மாவட்ட செசன்ஸ்...
குமரி: தங்கம் விலை உயர்வுக்கு அறிவிப்பு இல்லை – பிரேமலதா
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் நடைபெற்ற பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சி தனித்து போட்டியிடாது என்றும், நிச்சயமாக கூட்டணி அமைக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் யானை பசிக்கு சோளப்பொறி போன்றது என்றும், அதில் தங்கம்,...
குமரி: மாணவன் ஓட்டிய பைக் விபத்து – உறவினர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிங்சிலின் என்பவர், 12ஆம் வகுப்பு படிக்கும் தனது உறவினர் மகனுக்கு கடந்த 30ஆம் தேதி பைக்கை ஓட்டக் கொடுத்துள்ளார். அம்மாண்டி விளை பகுதியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி மாணவன் படுகாயமடைந்தான். நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்...












