ஈத்தாமொழி: அண்ணன் மனைவியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்த கௌரிஸ்வரி (48) என்பவர், தனது கணவரின் சகோதரர் ரவிக்குமார், அவரது மனைவி சோனியா மற்றும் மகன் பரத் ஆகியோரால் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். வீடு தொடர்பாக சிவில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. காயமடைந்த கௌரிஸ்வரி...
மார்த்தாண்டம்: கோயில் பூசாரிக்கு மிரட்டல்; வாலிபர் கைது
இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (25) என்ற கோயில் பூசாரி, இசக்கியம்மன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தபோது, ஸ்ரீகுமார் (39) என்பவர் அவர் மீது செருப்பை வீசி, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த விஷ்ணு அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார்...
களியக்காவிளை: சிவபார்வதி கோயிலில் சிவராத்திரி விழா துவக்கம்
களியக்காவிளை அருகே மகேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவபார்வதி கோயிலில் சிவராத்திரி திருவிழா நேற்று மாலை திருக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி, கோவில் மேல்சாந்தி குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். பிப்ரவரி 8 அன்று லட்சத்தீபம், 14 அன்று ஆராட்டு, மற்றும்...
குமரி: போலீசுக்கு தகவல் தெரிவிக்க முயன்றவர் மீது தாக்குதல்
கிராத்தூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஷ் (42) மீது, அதே ஊரை சேர்ந்த சிபின் மற்றும் சுனில் (30) ஆகியோர் மரக்கட்டையால் தலையில் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த சதீஷ் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார்...
நாகர்கோவிலில் நாய்களுக்கு உணவு வழங்க தனி இடம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாய்களுக்கு ஆங்காங்கே உணவு வழங்குவதால், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களுக்கு உணவு வைப்பதற்காக நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. புத்தேரி மேம்பாலத்தின் கீழ் பகுதி மற்றும் அனந்தனார் கால்வாய் கரை போன்ற பகுதிகள் இதற்காக...
குளச்சல்: மனைவி குழந்தைகளை வீட்டில் பூட்டி மாயமான மீனவர்
வாணியக்குடியைச் சேர்ந்த மீனவர் சுஜிமோன், தனது மனைவி ராதிகா மற்றும் இரு குழந்தைகளை வீட்டில் பூட்டிவிட்டு சாவியுடன் மாயமானார். இரண்டு நாட்களாக உள்ளே தவித்த அவர்களை உறவினர்கள் வந்து மீட்டனர். இதுகுறித்து ராதிகா அளித்த புகாரின் பேரில், சுஜிமோனை போலீசார் தேடி வருகின்றனர்.
தக்கலை: ஆசிட் வீச்சு; ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் முகத்தில் ஆசிட் வீசிய ஜான் பேபிக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் கடந்த 4.8.2019 அன்று நடந்தது. வாக்குவாதத்தின் போது ஜான்...
மார்த்தாண்டம்: ஆயுதங்களால் தாக்குதல் சம்பவம் ; 2 பேர் கைது
மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியில் நண்பர்களுடன் ஆட்டோவில் சென்ற அஜின் (33), மற்றொரு அஜின் (32), ஜாபர் (23) ஆகியோரை, அதே பகுதியை சேர்ந்த சர்ஜின் (20) மற்றும் சர்வின் (22) ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் வந்து அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து...
தேங்காப்பட்டணம்: மீன்பிடி துறைமுகத்தில் திடீர் தீ விபத்து
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் ஒன்றில் நேற்று (பிப்ரவரி 5) திடீரென தீப்பிடித்தது. குழித்துறை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஏராளமான அட்டைப் பெட்டிகளும், தெர்மாகோல் பெட்டிகளும் எரிந்து நாசமாயின. இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு...
நாகர்கோவிலில் தர்பூசணி விலை குறைந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை குறையத் தொடங்கியுள்ளது. திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி வரத்து அதிகரித்து, சீசன் தொடங்கியுள்ள நிலையில், கிலோ ரூ. 30 முதல் 35 வரை விற்ற தர்பூசணி தற்போது ரூ. 15 முதல் 20 வரை விற்பனையாகிறது.












