சேனம்விளை: பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டிய எம் பி

நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சேனம்விளை அரசு தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் விஜய்வசந்த் எம்பி யிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து 2 வகுப்பறை கட்டிடம் கட்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாடு திட்டத்தில் ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு...

குரியன்விளை: பத்திரகாளி கோயில் மஹா யாகம் துவக்கம்

கொல்லங்கோடு அருகே குரியன்விளையில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் பந்தல் நாழி சர்க்கரை பொங்கல் விழா நடப்பது சிறப்பு வாய்ந்தது ஆகும். இவ்வருடம் 12-வது பஞ்ச பூத ஷட் விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம் மற்றும் சித்திரை பரணி பிரதிஷ்டை...

இரணியல்: 30 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

நாகர்கோவிலில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக கஞ்சா கடத்தி செல்வதாக குமரி மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையில் இரணியல் போலீசார் சுங்கான் கடை பகுதியில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக வந்த காரை...

புதுக்கடை: சிறுமியிடம் செயின் பறித்த.. 4 பேர் கைது

புதுக்கடை அருகே ஐரேனிபுரம் பகுதி தும்பாலி என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜன். இவர் லோடு மேனாக வேலை பார்க்கிறார். இவர் மகள் அக்ஷரா (14). இவர் 9ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தற்போது பள்ளி விடுமுறையான காரணத்தால் புதுக்கடையில் ஒரு தையல் பயிற்சி கூடத்தில் சென்று வந்தார்....

குமரியில் வெரிகோஸ் நோயால் 91 போலீசார் பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெரிகோஸ் நோயால் 91 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாமில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான முகாமை எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 30 டாக்டர்கள் அடங்கிய குழு அவர்களுக்கு பல்வேறு வகையான உடல் தொடர்பான சோதனைகளை மேற்கொண்டது. இந்த முகாமில் 500க்கும் மேற்பட்டோர்...

வள்ளியூர்: சாலை விபத்தில் 7 பேர் பலி; குமரி ஆட்சியர் விசாரணை

வள்ளியூரில் நேற்று 2 சொகுசு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேரில் சென்று சிகிச்சையில் இருப்பவர்கள்...

மண்டைக்காடு: ஆழ்துளை கிணற்றில் திருட்டு

மண்டைக்காடு அருகே உள்ள பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் சேவியர் பால்ராஜ் (55). லாரி டிரைவர். புதிய வீடு ஒன்றை இவர் கட்டி வருகிறார். இவரது வீட்டின் முன் பகுதியில் ஆள்குழாய் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்த பிவிசி பைப் மற்றும் நீரில் மூழ்கக் கூடிய இயந்திர...

குலசேகரம்: ஓடு பஸ்ஸில் கண்டக்டரிடம் டிக்கெட்டுகள் அபேஸ்

மார்த்தாண்டத்தில் இருந்து தடம் எண் 89 எம் என்ற அரசு பஸ் நேற்று மாலையில் கோதையாறு நோக்கி சென்று கொண்டிருந்தது.   இந்த பஸ்ஸில் சர்ஜீத் (19) என்பவர் தற்காலிக கண்டக்டராக பணியிலிருந்தார்.   ஹரிஹர கிஷோர் டிரைவர் ஆக இருந்தார். இந்த பஸ்ஸில் எந்திரம் மூலம்...

பளுகல்: ரப்பர் சீட்டுகளை திருடிய தொழிலாளி கைது

பளுகல் அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (49). விவசாயி. இவர் தனது வீட்டுக்கு பின்புறம் ரப்பர் சீட்டுகளை காய வைத்திருந்தார். சம்பவ தினம் இரவு அங்கு சென்ற மர்ம நபர் சுமார் 19 கிலோ எடை உடைய ரப்பர் சீட்டுகளை திருடி சென்று விட்டார். இது...

கிள்ளியூர்: கால்வாயில் கொட்டிய கழிவுகள் திருப்பி அனுப்பி வைப்பு

கிள்ளியூர், மங்காடு ஊராட்சி பகுதி வழியாக நெய்யாறு இடது கரை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் இரவு வேளைகளில் மர்ம நபர்கள் கழிவு பொருட்களை கொட்டி விட்டு செல்வது வழக்கம். இதை கண்டறியும் வகையில் அந்த பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. இந்த...