கூட்டாலுமூடு: அம்மன் கோயில் விழா; தமிழக ஆளுநர் பங்கேற்பு
புதுக்கடை அருகே கூட்டாலுமூடு அருள்மிகு பத்தரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவில் இந்து சமய மாநாடு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழக ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து...
நாகர்கோவில்: பொன்னப்ப நாடார் சிலை; அமைச்சர் ஆய்வு
சுதந்திர போராட்ட தியாகி பொன்னப்ப நாடாருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி, நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில், சிலை...
பத்துகாணி: வன பகுதியில் மக்களை அச்சுறுத்தும் ஒற்றை யானை
குமரி மாவட்டம் பத்துகாணி வனப் பகுதியில் கடந்த வாரம் ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு காட்டு யானை புகுந்து முண்டன்காணி என்பவர் வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதே பகுதியில் கற்றுவா என்ற பழங்குடி குடியிருப்பு பகுதியில் ஒரு...
வெள்ளிச்சந்தை: பைக் மோதி மூதாட்டி படுகாயம்
வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஆளூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி சொர்ணம் (70). இவர் சம்பவ தினம் தனது மகளை திருமணம் செய்து கொடுத்த ஊரில் நடந்த திருவிழாவைப் பார்க்கச் சென்றார். பின்னர் நேற்று அவர் ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வெள்ளிச்சந்தை - வெள்ளமோடி சாலையில்...
அருமனை: கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மானிய விலை எண்ணெய் போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அருமனை வழியாக சொகுசு வாகனத்தில் ரேஷன் அரிசி கொண்டு செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் காரோடு என்ற பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,...
அதங்கோடு: முதியவர் மர்ம சாவு; போலீசார் விசாரணை
அதங்கோடு, எஸ்டி மாங்காடு பகுதியை சேர்ந்தவர் துளசிதரன் (78). இவர் தனியாக தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் துளசிதரன் தங்கி இருந்த வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், தக்கலை பகுதியில் வசிக்கும் அவரது மகள் அனுபாமா...
தேங்காபட்டணம்: பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
தேங்காபட்டணம் பகுதி முள்ளுர்துறையை சேர்ந்தவர் ஜாண்பிரிட்டோ மனைவி ஜோஜி (23). அதே பகுதியை சேர்ந்தவர் ஜோசப் கென்னடி (45). ஜோசப் கென்னடி மனைவி குப்பைகளை ஜோஜியின் வீட்டு முன்பு கொட்டியுள்ளார். இதை தட்டிக் கேட்டதால் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று ஜோசப் கென்னடி, ஜோஜியின் வீட்டில் அத்துமீறி...
மார்த்தாண்டம்: பஸ்ஸில் குழந்தையிடம் செயின் திருடிய பெண் கைது
கருங்கல் அருகே பெருமாங்குழி பகுதி சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி அனுப்பிரியா (26). இவர் சம்பவ தினம் தனது 2 வயது குழந்தையுடன் கருங்கலில் இருந்து மார்த்தாண்டத்திற்கு பஸ்ஸில் சென்றார். மார்த்தாண்டம் பஸ் நிலையம் வந்தபோது குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இது...
குமரியில் கோக்கோ பயிர் – கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வேம்பனூர் கிராமத்தில் தென்னை, வாழை, கோக்கோ, நல்ல மிளகு, சேனைக்கிழங்கு, மரவள்ளி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயி சிறுமணி தோட்டத்தினை மாவட்ட கலெக்டர் அழகு மீனா நேற்று நேரில் ஆய்வு செய்தார். சொட்டு நீர் பாசனம் மூலம் பயன்படுத்தி...
மார்த்தாண்டம்: போலீசுகான இலவச மருத்துவ முகாம்
மார்த்தாண்டம் காவல்துறை, போக்குவரத்து காவல்துறை மற்றும் மார்த்தாண்டம் ரோட்டரி கிளப், புலனாய்வு அரசு செய்தி தொடர்பகம் இணைந்து போலீசார் மற்றும் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று மார்த்தாண்டம் குறும்பேற்றி அம்மன் மண்டபத்தில் நடைபெற்றது. மார்த்தாண்டம் ரோட்டரி கிளப் தலைவர் சரவணன் வரவேற்றார். மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் உதய...












