தக்கலை: வெளிநாட்டில் வேலை என மோசடி; வாலிபர் கைது

0
56

தக்கலை அருகே உள்ள பருத்திக்காட்டு விளையை சேர்ந்தவர் ராஜா (56) இவரிடம் திங்கள்சந்தை பகுதியை சேர்ந்த ரிஜோ ஜெனிஷ் (30) என்பவர் தான் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்துவதாக கூறியுள்ளார். 

இதை நம்பிய ராஜா தனக்கு தெரிந்த 10 பேரிடம் இருந்து 10 லட்சத்து 63 ஆயிரத்து 200 ரூபாயை ரிஜோ ஜெனிசிடம் பல தவணையாக ரொக்கமாகவும், கூகுள் பே மூலமாகவும் வாங்கி கொடுத்துள்ளார். இந்த பணத்தை வாங்கியது ஜெனிஸ் 10 பேருக்கும் போலந்து நாட்டில் வேலை செய்வதற்கான பணியாணையை ராஜாவிடம் கொடுத்துள்ளார். 

அதை வாங்கி விசாரித்த போது அது போலியானது என்பது தெரியவந்தது. ஜெனிஸ் உடன் கேட்டபோது அவர் சரியான பதில் கூறவில்லை. இதை எடுத்து ராஜா தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். 

பணத்தை கொடுக்காமல் ரிஜோ ஜெனிஸ் ஏமாற்றி வந்துள்ளார். இந்த மோசடி குறித்து ராஜா தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று ரிஜோ ஜெனிசை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here