நட்டாலம்: பெட்டிக் கடையில் 152 புகையிலை பாக்கெட் பறிமுதல்

0
379

மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று அந்தப் பகுதிக்குச் சென்று ஒவ்வொரு கடையிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக் கடையில் சோதனை நடத்தியபோது சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த 152 புகையிலைப் பாக்கெட்டுகளைக் கண்டுபிடித்தனர். இவைகள் அனைத்தும் விற்பனைக்காக வைத்திருந்ததுதெரியவந்தது. இதைஅடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் கருங்கல் அருகே அரிசிவிளை பகுதியைச் சார்ந்த லாசர் (64) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here