குமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது அனுபமா என்ற யனையை நேற்று இரண்டு பாகன்கள் தென்னை ஓலை பறிக்க கொண்டு சென்றனர். பின்னர் மாலையில் திரும்பி வரும்போது ஒரு பாகனை காணவில்லை.
யானை மீது இருந்த மற்றொரு பாகன் முழு போதையில் இருந்ததால் யானை எங்கு செல்வது என தெரியாமல் தடுமாறியது. இதற்கிடையில் பாகன் போதையில் யானை மீது படுத்து தூங்கினார்.
இதையடுத்து யானை சாலையோரம் நின்றது. இதை பார்த்த பொதுமக்கள் யானை மீது படுத்த பாகன் கீழே விழுந்தால் ஆபத்து என வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து போதை பாகனை மீட்டு, யானையை அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக வனத்துறையினர் யானைப்பாகன் , யானை உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.