குமாரபுரம் அருகே வடக்குபாகம் பகுதியை சேர்ந்தவர் கணபதி (45). இவர் நாகர்கோவில் உள்ள அரசு ரப்பர் கழக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது தம்பி முருகன் (44). இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் குடும்ப சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 11) கணபதிக்கும் முருகனுக்கும் இடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதை அடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கினர். இதில் இருவரும் காயம் அடைந்தனர்.
இது குறித்து கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் கணபதியும் முருகனின் மனைவி பிரமிளாவும் தனித்தனியாக புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன் தம்பி இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.