மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்கக் கூட்டம் நேற்று (மார்ச்.12) மாலையில் மேல்புறம் சந்திப்பில் நடந்தது. இதில் மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவர் சரவணவாஸ் நாராயணன் தலைமை வகித்தார்.
முன்னாள் ஒன்றிய தலைவர் சேகர், இடைக்கோடு பேரூராட்சி தலைவி உமாதேவி, வித்தியாதரன், சுகுமாரன், குமரி மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள், கிளை, ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். கட்சி நிர்வாகி ராஜேந்திர பிரசாத் நன்றி கூறினார்.