மணவாளக்குறிச்சி: 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

0
34

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டி விளை பகுதியைச் சேர்ந்தவர் சுமதி (31). இவருக்கும் திருச்செந்தூர் கோவில் தெருவைச் சேர்ந்த தர்மராஜ் (45) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இந்தத் தம்பதிக்கு நேகா (9) என்ற மகளும் தருண்குமரன் (7) என்ற மகனும் உள்ளனர். 

தர்மராஜ் திருச்செந்தூரில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி தாயார் உடல்நிலை சரியில்லை என்பதால் சுமதி தனது இரண்டு குழந்தைகளுடன் அம்மாண்டி விளைக்கு வந்துள்ளார். இங்கு 7 நாட்கள் தங்கி இருந்து தாயாரைக் கவனித்து விட்டுப் பின் கணவர் வீட்டுக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் திருச்செந்தூருக்குச் செல்லவில்லை. 

இதுகுறித்து தர்மராஜ் மாமனாரிடமும் மாமியாரிடமும் போனில் கேட்டபோது சுமதி 2 பிள்ளைகளுடன் மாயமாகி விட்டதுத் தெரியவந்தது. இதையடுத்து தர்மராஜ் உடனடியாக அம்மாண்டி விளைக்குப் புறப்பட்டு வந்தார். இங்கு பல இடங்களிலும் அவர் தேடியும் மனைவி குழந்தைகள் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து தர்மராஜ் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here