தக்கலை அருகே உள்ள செம்பருத்தி விளையை சேர்ந்தவர் அந்தோணி (66). இவர் ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர். நேற்று தனது பைக்கில் தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தக்கலை அடுத்த புலியூர்குறிச்சி பகுதியில் செல்லும்போது பின்னால் வந்த கார் ஒன்று அந்தோணியின் பைக்கில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் கார் ஓட்டி வந்த மார்த்தாண்டத்தை சேர்ந்த பிரேம் ஜித் (44) என்பவர் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.