இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று (ஜூன் 8) ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடுத்தது. இத்தகைய சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள்...
தீய எதிரிகளான அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஈரான் தீர்க்கமான அடியை கொடுத்துள்ளதாக அந்நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியின் நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா கோமேனியின் 37-வது நினைவு நாளையொட்டி மொஜ்தபா கமேனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை, அயதுல்லா ருஹோல்லா கோமேனியின் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத போதகரால் வாசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, இந்த அறிக்கை மொஜ்தபா கமேனியின் எக்ஸ் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது....
ஈரான் போரை நிறுத்தக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடங்கியது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. எனினும் தற்காப்பு தாக்குதல் என்ற பெயரில் அமெரிக்காவும் ஈரானும் அவ்வப்போது போர் நிறுத்தத்தை மீறி வருகின்றன.
இந்த சூழலில்...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்துக்கொண்டு, லாரி ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரிசோனாவின்யுமா செக்டார் பகுதியில் எல்லை ரோந்துப் படையினர் கடந்த மே 11 முதல் 15 வரை ‘ஆபரேஷன் செக்மேட்' என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருந்த 52 பேரை கைது செய்தனர்....
அமெரிக்கா - ஈரான் இடையேயான சண்டை நிறுத்தத்துக்குப்பின் நேற்று இரு நாடுகள் இடையே மிகப் பெரியளவில் மோதல் வெடித்தது. இதில் குவைத் விமான நிலையம் தாக்கப்பட்டதால், அங்கு இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததால் அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் ராணுவத் தளங்கள் பல சேதம் அடைந்தன. இந்நிலையில்...
கட்டாயத் தொழிலாளர் முறையைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, இந்தியா, சீனா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 54 நாடுகள் மீது 12.5% புதிய வர்த்தக வரிகளை விதிப்பதற்கான பரிந்துரையை அமெரிக்கா நேற்று வழங்கியது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் (யுஎஸ்டிஆர்) ‘செக்சன் 301’ சட்டப் பிரிவின் கீழான விசாரணைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு இடையே டெல்லியில் மிக முக்கியமான வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே...
நெடுந்தூரம் நிற்காமல் செல்லக்கூடிய வான்வழிப் பயண வரலாற்றில், ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் நிறுவனத்தின் ‘புரொஜெக்ட் சன்ரைஸ்’ திட்டத்தின் சோதனை ஓட்டத்தை ஏர்பஸ் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்த நீண்ட பயணத்துக்கான விமானங்களை குவாண்டாஸ் நிறுவனத்துக்கு ஏர்பஸ் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது.
அந்த வகையில், கடந்த பத்தாண்டுகளாகத் திட்டமிடப்பட்டு வந்த இந்த திட்டம் இப்போது முக்கிய இலக்கை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கனவிலிருந்து நனவாக மாறத் தொடங்கியுள்ள இந்த...
அபுதாபியில் குடியிருப்புகள், வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த சொத்துகளுக்கான வாடகை உயர்வை அடுத்த அறிவிப்பு வரும் வரை அரசு முடக்கி வைத்துள்ளது.
இதன்படி வீட்டு உரிமையாளர்கள் தற்போதுள்ள வாடகைதாரர்களுக்கு வாடகையை உயர்த்தவோ அல்லது இதற்கு முன்பு வாடகைக்கு விடப்பட்ட சொத்துகளில் குடியேறும் புதிய வாடகைதாரர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அபுதாபியின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை அமைப்பான அபுதாபி ரியல் எஸ்டேட் மையம் இந்த முடிவை அறிவித்துள்ளது, மேலும் இது...
இந்திய எல்லை விவகாரத்தில் நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவின் கருத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரி வருகின்றனர்.
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை ஒருதலைப்பட்சமான விவகாரம் அல்ல என்று அந்நாட்டு பிரதமர் பாலேந்திர ஷா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நேபாள நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அவரது கருத்து அந்நாட்டு மக்களை கொதிப்படைய செய்துள்ளது.
கடந்த...
அமைதி முயற்சியை சீர்குலைக்கும் வகையில் லெபனான் மீது தாக்குதல் நடத்திய நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்தின. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போராக வெடித்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் அறிவித்த அமெரிக்கா, ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், லெபனான்...










