Google search engine
மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த சனிக்கிழமை போட்டி முடிவடைந்த நிலையில் பார்படாஸ் நகரில் வீசிய புயல் காரணமாக இந்திய அணி தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. புயலால் பார்படாஸ் விமானநிலையம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் கரையை கடந்த...
செல்டன்ஹாமில் நேற்று முடிவடைந்த கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் குளஸ்டர்ஷயர் அணியும் கிளாமர்கன் அணியும் போட்டியை வரலாற்று ‘டை’ செய்தது. 593 ரன்கள் வெற்றி இலக்கை சேஸ் செய்து கிளாமர்கன் அணி 592 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி போட்டி வரலாற்று டை ஆனது. குளோஸ்டர்ஷயர் அணி 179 மற்றும் 610/8 டிக்ளேர் செய்ய கிளாமர்கன் 197 மற்றும் 592 ரன்கள். கிளாமர்கன் கேப்டன் சாம் நார்த்ஈஸ்ட் சேசிங்கின் போது 187...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தொடர் முழுவதும் இந்திய அணி,...
இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள மூவர் கூட்டணியின் அற்புதமான செயல்பாட்டால் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை வசமாகியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து இந்த முறை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தின. இந்நிலையில் நேற்று முன்தினம் மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. இதற்கு...
இந்திய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் பெற்றது. சென்னையில் இந்த டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்திருந்தது. நேற்று நடைபெற்ற 3-ம் நாள்...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகளில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 68 ரன்களில் வீழ்த்தியுள்ளது இந்தியா. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா. அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி இருந்தனர். மேற்கு இந்தியத் தீவுகளின் கயானாவில் நடைபெற்ற இந்த போட்டியில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர்...
இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் சென்னைசேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி முழுமையாக 3-0 என கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும்...
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தவிர்க்கமுடியாத டக்வொர்த் லீவிஸ் முறையை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான பிராங்க் டக்வொர்த் தனது 84 வயதில் கடந்த 25-ம் தேதி காலமானார். மழை போன்ற வானிலை காரணங்களால் ஒருநாள் கிரிக்கெட், டி 20போட்டி பாதிக்கப்பட்டால் இலக்கை கணக்கீடு செய்து மாற்றி அமைப்பதற்கும், ஆட்டத்தின் முடிவை காண்பதற்கும் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விதியை இங்கிலாந்தை சேர்ந்த புள்ளியியல் நிபுணர்களான பிராங்க் டக்வொர்த், டோனி லீவிஸ்...
தமிழ்நாடு கிரிக்கெட் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் போட்டிகள் வரும் ஜூலை 5-ம் தேதி தொடங்குகின்றன. இந்தத் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. உள்ளூர் வீரர்களின் திறனை கண்டறியும் இந்த தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. லீக் ஆட்டங்கள்...