உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை: ஜெய் ஷா அறிவிப்பு!

0
73

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தொடர் முழுவதும் இந்திய அணி, அசாதாரணமான திறமை, அர்ப்பணிப்பு மற்றும் ஸ்போர்ட்மேன்ஷிப் ஆகியவற்றை வெளிப்படுத்தியது. இந்த மிகச்சிறந்த சாதனையை செய்த அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துகள்” இவ்வாறு ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. பாண்டியா, பும்ரா, அர்ஷ்தீப் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். டி20 உலகக் கோப்பை அரங்கில் இந்தியா வெல்லும் இரண்டாவது சாம்பியன் பட்டம் இது.